தமிழகத்தில் சிவாஜிக்கு என்ன போர்த்தினார்கள்? அப்படியானால் அந்த மாபெரும் நடிகனை வஞ்சித்தார்களா?

0 180

ஸ்ரீதேவி என்பவர் திறமையான நடிகை, எல்லோராலும் அறியபட்டவர் பலரால் விரும்பட்டவர், சந்தேகமில்லை நல்ல நடிகை அதற்காக அவர் உடலில் தேசியகொடி போர்த்தி அரசு மரியாதை செய்வது என்ன நியாயமோ தெரியவில்லை

நாட்டிற்கு அவர் செய்ததென்ன? மக்களுக்கு பணி செய்தாரா? எல்லையில் துப்பாக்கி பிடித்தாரா? இல்லை மக்களுக்காக போராட்டம்தான் செய்தாரா?

நடிப்பு அவர் தொழில், அதனை செய்தார் அவ்வளவுதான், அதில் சம்பாதித்தார். வருமானத்தில் அரசுக்கு சரியாக வரிகட்டினாரா என்பது கூட தெரியாது

ஏதோ அவர் லால்பகதூர் சாஸ்திரி போல ரஷ்யாவிற்கு சமரசம் பேச சென்றது போலவும், அங்கு இறந்தது போலவும் அவருக்கு ஏன் தேசியகொடி போர்த்தவேண்டும்?

சொந்த பணத்தில் உல்லாசமாக துபாய் சென்றார், ஆடம்பர ஹோட்டலில் தங்கினார் உயிர்துறந்தார்

இதில் இந்நாட்டிற்கு என்ன இழப்பு? ஸ்ரீதேவி இந்நாட்டின் அடையாளம் என எதில் நிரூபித்தார்?

ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினாரா? நோபல் வாங்கினாரா? இல்லை உலக அங்கீகாரம் எதனையாவது இந்தியாவிற்கு வாங்கி தந்தாரா?

ஒரு ஆஸ்கர்? ஒரு கிராமி? இந்த தேசத்திற்கு என்ன வகையில் பெருமை சேர்த்தார் அவர்?

அவர் கலெக்டராக இருந்தாரா? அரசுபணியில் இருந்தாரா? இல்லை நீதிமன்ற குமாஸ்தாவாக கூட இருந்தார? என்றால் இல்லை, ஒரு அரசுபணிக்கும் வராத ஒருவருக்கு ஏன் இந்த மரியாதை? இது தேசிய அவமானம் இல்லையா?

இதெல்லாம் மாபெரும் தவறான முன்னுதாரணங்கள், தேசியகொடிக்கு பெரும் அவமானம் கொடுக்கும் விஷயங்கள்

தேசியகொடி மகா கவுரவமானது. மாபெரும் தியாகிகளுக்கும், மூத்த அரசியல்வாதிகளுக்கும் கலாம் போன்ற விஞ்ஞானிகளுக்கும், நாட்டிற்கு உயிர்நீத்த ராணுவத்தினருக்கும் போர்த்தபட வேண்டியதை, ஒரு நடிகைக்கு அதுவும் குடித்து செத்த நடிகைக்கு போர்த்துவது என்ன வகை?

இத்தேசத்தினை நேசிப்பவர் என்ற முறையிலும், இந்நாட்டு கொடியினை உயிருக்கு நிகராக மதிப்பவர் என்ற முறையிலும் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்,

ரத்தம் கொதிக்கும் விஷயமிது

போனிகபூர் என்பவன் யார்? அவனின் இரண்டாம் மனைவி இந்நாட்டிற்கு ஆற்றிய சேவை என்ன?

நல்ல வேளையாக சில்க் ஸ்மிதா, திவ்யாபாரதி போன்றவருக்கு ஏன் தேசியகொடி போர்த்தவில்லை என சிலர் கேட்காமல் இருக்கின்றானே அதுவரை நல்லது

நாளை இன்னொரு நடிகை செத்தால் போர்த்துவார்களா? உதாரணத்திற்கு ஷகிலா அடுத்த நாட்டில் செத்தாலும் இதனை செய்வார்களா? நாடு தாங்குமா?

தமிழகத்தைத்தான் சினிமா கெடுத்தது என்றால் அது இந்திய தேசியகொடியின் மரியாதையினை கெடுக்கும் அளவிற்கு சென்றதை நல்ல இந்தியன் கண்டிக்காமல் இருக்க மாட்டான்

இதனை செய்தவர்களை தேசிய கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாளை ஸ்ரீதேவி வீட்டு நாய் செத்தாலும் போர்த்த கிளம்புவார்கள்

உடனே நடவடிக்கை எடுத்தால் இந்த அரசுக்கு கொஞ்சமேனும் உணர்சி இருக்கின்றது என அர்த்தம் , கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த அரசு இந்நாட்டை ஆள அருகதை இல்லா அரசு

உறுதியாக சொல்கின்றோம் பால் தாக்கரே போன்றோர் இருந்திருந்தால் நிச்சயம் இதனை நேரில் சென்று கண்டித்திருப்பார்

அவர் என்ன நாட்டுபற்றுள்ளவன் எவனாக இருந்தாலும் கண்டிப்பான், நிச்சயம் பலர் மனதிற்குள் முணுமுணுப்பர் , பலருக்கு இதயம் எரிந்துகொண்டிருக்கின்றது

இனி எவனாவது தேசிய கீதம் பாடும்பொழுது அவன் எழவில்லை, இவன் எழவில்லை என சொல்லட்டும் அவர்களுக்கு அன்று இருக்கின்றது

ஒரு நடிகைக்கு தேசிய கொடி போர்த்தும் அளவிற்கு இந்நாடு சென்றுவிட்டதை எண்ணி நாணத்தால் தலைகுனிகின்றோம்

பத்ம‌ஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கு அந்த மரியாதை கொடுக்கலாம் என பலர் கிளம்புகின்றார்கள், இதுவரை அப்படி பத்ம‌ஸ்ரீ விருது பெற்ற எத்தனை பேருக்கு கொடி போர்த்தினார்கள், ஒருவருக்குமில்லை

தமிழகத்தில் சிவாஜிக்கு என்ன போர்த்தினார்கள்? அப்படியானால் அந்த மாபெரும் நடிகனை வஞ்சித்தார்களா? சிவாஜியினை விடவா ஸ்ரீதேவி கிழித்துவிட்டார்?

இவை எல்லாம் சப்பைகட்டுக்கு சொல்லும் விஷயங்கள்

“தாயின் மணிக்கொடி பாரீர்”எனும் பாரதியின் வீரமிக்க நாட்டுபக்திமிக்க வார்த்தைகளை கம்பீரமாக சொல்லி உயர பறக்கும் தேசிய கொடியினை ஒரு … மீது பார்க்குமளவு நமக்கு கொடிய காலம் இருந்திருக்கின்றது

இதற்கு கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த அரசு ஆளதகுதியற்றது என்பதே அர்த்தம்

ஏ மும்பையர்களே, அந்த சன்னிலியோன் என்பவர் குளிக்கும் தொட்டியிலோ இல்லை வரகூடாத நோய் வந்து செத்தாலோ இப்படி போர்த்தி தொலைத்துவிடாதீர்கள் என கெஞ்சி கேட்டுகொள்கின்றோம்{

You might also like

Leave A Reply

Your email address will not be published.