நாட்டு நாய்களின் ரகசியம் பற்றிய மறுபக்கம்..!

0 494

நாட்டு நாய்கள்
உலகிலேயே மனிதனுக்கு நன்றியுள்ள பிராணியாக இருப்பது நாய். நாய்க்கு இருக்கும் நன்றி கூட மனிதனுக்கு இல்லை என்பார்கள். செல்லப் பிராணிகள், காவல் நாய்கள், துப்பறியும் நாய்களை தாண்டி, குழந்தைகளை வளர்க்கும் நாய்கள், பொழுது..
கொம்பை:
உடல் வலிமை வாய்ந்த கொம்பை நாய்களை கி.மு. 9ம் நூற்றாண்டுகளில் மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை நாய்கள் காடுகளில் மான் வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் தமிழகத்தில் அதிகம் வளர்க்கப்பட்ட நாய் இனம் கொம்பை ஆகும். இப்போது அரசு பங்களாக்களை கொம்பை நாய்கள் காவல் புரிகின்றன.
கன்னி :
இது உக்கிரமான வேட்டை நாய் வகையைச் சேர்ந்தது. தமிழகத்தில் மட்டும் காணப்பட்ட  கன்னி நாய்களை வெளிநாட்டினர் அதிக விலைக்கு வாங்கிச் செல்வர். திருநெல்வேலி, பொள்ளாச்சி, மதுரை, சிவகாசி, கழுகுமலை, கோவில்பட்டி பகுதிகளில் கண்ணி நாய்கள் அதிகம் வளர்க்கப்பட்டன. இந்த நாய் தன்னுடைய உடல்நலம் மீது மிகுந்த அக்கரை கொண்டது. ராகி பயிரை தின்று உடலை வாகுவாக வைத்திருக்கும். மாதத்திற்கு அல்லது வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இறைச்சியை உண்ணும். இப்போது இந்த இன நாய்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றன.


அலங்கு:
உயராமாக வளரக்கூடிய அலங்கு நாய். கிமு ல் பெர்சியன் ராணுவம் நமது அலங்கு நாய்களை ராணுவப் பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். எதிரிகள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து, அவர்களுடன் சண்டை போடும் அளவிற்கு வல்லமை கொண்ட நாய் இது. இதனால் இவ்வகை நாய்களை சண்டை நாய்கள் என்று அழைப்பர். இன்றும் கூட பாகிஸ்தான் இராணுவத்தில் அலங்கு நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த நமது நாட்டு நாய்கள் இன்று அளிக்கப்பட்டுள்ளன. இதன் அழிவிற்கு கலப்பு இனப்பெருக்கமும் ஒரு காரணம். இங்குள்ள ராஜபாளையம் நாய்களை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று, அங்கிருக்கும் நாய்களுடன் இனப்பெருக்க செய்ய விட்டுவிடுகிறார்கள். இதனால் உள்ளூர் நாய்கள், புதிய வெளிநாட்டு நாய்களாக இங்கு இறக்குமதி ஆகிறது. அதையும் நாம் அதிக விலை கொடுத்து வாங்கி வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அதற்கென ப்ரித்யேகமாக தீனியையும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று கோடி கோடியாக காசு பார்க்கிறார்கள். உண்மையில் நாட்டு நாய்களே உடல் வலிமையிலும், ஆக்ரோஷத்திலும் சிறந்தவை. உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப உடலமைப்பை மாற்றிக்கொண்டு நம்முடன் வாழக்கூடியவை. அவைகள் நம்முடைய நாய்கள். அவைகளின் இனத்தை காப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.