நீங்கள் சமூக ஆர்வலரா..? உங்களுக்கான ஒரு முயற்சி முடிந்தால் பங்கு கொள்ளுங்கள்..!

0 415

உங்களை சுற்றி நிகழும் சாதானைகள், வேதனைகள், சமூக அவலங்கள் தமிழின் சிறப்புகள், விலங்குகளின் சிறப்புகள், பண்பாட்டின் சிறப்புகள்,நீர்நிலைகளின் முக்கியதுவங்கள், விழிப்புணர்வு கதை , கவிதை போன்ற உங்களது படைப்புகளை 250  வார்த்தைக்கு குறையாமல் உங்கள் பெயர் , ஊர் குறிப்பிட்டு இந்த மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்
[email protected]
நாங்கள் அதனை செய்தியாக வெளியிட்டு உங்கள் படைப்பின் சிறப்புகளை வெளியுலகிற்கு காட்டுகிறோம்..!

தன்னில் எது சமூக மாற்றம் ?
தேவைக்கு அதிகமாய்
எதையும்
சேர்க்காமல் இருப்பது.

வீட்டில் எது சமூக மாற்றம் ?
அவரவர் வீட்டுக்குப்பையை
அடுத்தவீட்டு வாசலுக்கு
தள்ளாதிருப்பது.


வீதியில் எது சமூக மாற்றம் ?
மற்றவர் வைத்த
மரங்களெனினும்
பற்றுவைத்து பராமரிப்பது.

சாலையில் எது சமூக மாற்றம் ?
பின்னே ஒலி எழுப்பும்
வாகனத்திற்கு
முன்னே செல்ல வழிவிடுவது.

ஊரில் எது சமூக மாற்றம் ?
இன்னொரு இனத்தின்
இழவிற்கு
கண்ணீரோடு கலந்துகொள்வது.

மாநிலத்தில் எது சமூக மாற்றம் ?
வீணாய் கடல்சேரும் முன்
தானாய் மனமுவந்து
தண்ணீரை திறந்துவிடுவது.

நாட்டில் எது சமூக மாற்றம் ?
மரபணுக்களில் ஊறிப்போன
ஊழல் தொற்றை
அறவோடு அழிப்பது.

உலகில் எது சமூக மாற்றம் ?
உரிமைக்காக போராடும்
உணர்வாளர்களுக்கு
உண்மையாக குரல்கொடுப்பது.

ரோகிணி அம்மாள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.