இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் எதனை அடிப்படையாக கொண்டது தெரியுமா..?

0 167

உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள்
இந்தியாவில் வேளாண்மைக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலை நிலவுவதாலும், இயற்கை வளங்கள் ஏராளமாக இருப்பதாலும், ஏராளமான வேளாண் விளை பொருட்களை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. தேங்காய், மாம்பழம், வாழை, பால், பால் பொருட்கள், முந்திரி பருப்பு, பருப்பு வகைகள், இஞ்சி, மஞ்சள், மிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். அரிசி, கோதுமை, சர்க்கரை, பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது.


பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் துறை
பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான துறையாக விளங்கும் வேளாண்துறைதான் இந்தியாவில் 70% தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, ஜவுளித்துறை, சணல், சர்க்கரை உள்ளிட்ட முக்கியத் தொழில்களுக்கு அடிப்படையாக விளங்குவதும் வேளாண்மைதான். இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பில் 17 சதவீ தத்தை வேளாண் துறையும் அது சார்ந்த துறைகளும் தான் பங்களிக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 25% வேளாண் உற்பத்தி பொருட்கள் வகையை சேர்ந்தவையாகும்.


முதன்மை பொருட்கள் இந்தியாவிலிருந்து உயர் மதிப்புள்ள வேளாண் உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இந்திய அரசு 1985ம் ஆண்டிலேயே வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) என்ற தனி அமைப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் இந்த அமைப்பை அரசு ஏற்படுத்தியது. இந்த அமைப்பு மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில், சந்தை பேக்கேஜிங், பயிற்சி ஏற்றுமதிக்கான ஏற்றுமதியாளர்களுக்கு இந்த அமைப்பு உதவி செய்தது. இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பாசுமதி அரிசி கசகசா ஆகியவை தான் ஏற்றுமதிக்கான முதன்மைப் பொருட்களாக கண்டறியப்பட்டன. முறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் தாராளமயமாக்கல் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டாலும் தூய்மை விதிகள், சந்தை அணுகுமுறை வரித்தடையற்ற வணிகம் போன்றவை உலக வணிகத்தில் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இதைதவிர, தீமை ஆய்வு கட்டுப்பாட்டு அமைப்பு (Hazard Analysis Critical Control Point) என்ற புதிய முறையும் உலக வணிகத்தில் நடைமுறைக்கு வந்தது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தரக்கட்டுப்பாடுகளை விதித்தன. இதை எதிர்கொள்வதற்காக இந்திய அரசு அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.

“பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் கோழிப் பண்ணைப் பொருட்கள், மலர்கள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட 14 வகையான உணவுப் பொருட்களுக்கு உலக நாடுகள் நிர்ணயித்துள்ள தர அளவுகளை உறுதி செய்வதற்காக சாத்தியக் கூறுகளை நடத்துவதில் தொடங்கி தொழிற்சாலைகளை அமைப்பது வரை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த மத்திய அரசு, அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியது”


APEDA அமைப்பு
மசாலாப் பொருட்கள் வாரியம்,
தென்னை வளர்ச்சி வாரியம்,
புகையிலை வாரியம்,
காஃபி வாரியம்
ரப்பர் வாரியம்


APEDA அமைப்பின் மூலமான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி பலமடங்கு உயர்ந்தது.
இந்தப் பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்பதில் எந்த வழியாக சென்று எங்கு யாரிடம் விற்பனை செய்யப்பட்டன என்பது வரையிலான எல்லா தகவல்களையும் இணையதளம் மூலமாக கண்டறிவதற்காக டிரேஸ்நெட் (Tracenet) என்ற பெயரில் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டது.


இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களின் உண்மையான திருத்தப்பட்ட உற்பத்தி தகவல்கள் மற்றும் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட தகவல்களை பராமரிக்க இந்தமுறை உதவுகிறது.


APEDA மூலம் மொத்தம் 80 நாடுகளுக்கு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் போதிலும் உலகின் ஒட்டுமொத்த வேளாண் பொருட்கள் வணிக அளவில் இந்தியாவின் பங்கு வெறும் 16 சதவீதம் மட்டும் தான்.


ஆதாரம் : உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)

You might also like

Leave A Reply

Your email address will not be published.