டால்டா எண்ணெய் எதிலிருந்து எடுக்கிறார்கள் தெரியுமா..?

0 2,647

வனஸ்பதி என்பதைத்தான் நாம் டால்டா என்று அழைக்கின்றோம்.

Palm oil ல் இருந்துதான் வனஸ்பதி அதிகம் தயாராகிறது. வேறு சில தாவர எண்ணெய்களில் இருந்தும் வனஸ்பதி தயாராகிறது.

இது நூறு சதவீதம் தாவரக் கொழுப்பு ஆகும். தயிரில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் எப்படியோ அந்த மாதிரி palm oilல் இருந்து எடுக்கப்படும் வனஸ்பதி.

வனஸ்பதி (Vanaspati) என்பது தாவர எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படுவது (hydrogenated vegetable fat). ஹிந்துஸ்டான் லீவர் லிமிடெட் (Hindustan Lever Limited, HLL) Dalda என்ற brand பெயரில் வனஸ்பதியை விற்பனை செய்து வருகின்றது.

இன்று மக்கள் வனஸ்பதி என்ற பெயரை மறந்து, அதனை டால்டா என்று அழைக்கும் அளவிற்கு அந்த பெயர் பிரபலம் ஆகிவிட்டது.

டால்டா :

Dalda என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? HLL நிறுவனம் 1930 களில், நெதர்லாந்தைச் சேர்ந்த Dada & Co என்ற நிறுவனத்திடம் இருந்து வனஸ்பதியை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தது.

Dada & Co நிறுவனப் பெயர் விற்பனை செய்யப்படும் brand ல் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில், Dada என்ற பெயரின் மத்தியில் Hindustan Lever ன் L மட்டும் சேர்க்கப்பட்டு Dada product, Dalda வாக மாறி இன்றும் நிலைத்து நிற்கின்றது.

டால்டா உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் இது பலருக்கு வாயுத் தொல்லை ஏற்படுத்துவதுடன் உடல் உபாதைகள், ஒவ்வாமை காரணமாக இதை யாரும் அதிம் உபயோகிப்பதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.