அழகால்தான் அவளுக்கு வேலை கிடைத்தது, பதவி உயர்வு கிடைத்தது அழகால்தான் அவள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றுகொண்டிருக்கிறாள்

0 310

பால்கோவாவின் சுவையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டால் அதன் சுவையை பற்றிதான் அனைவரும் சொல்வோம். அதை விடுத்து, அதன் சுவையில் என்ன இருக்கிறது அதை செய்ய பால் அளித்த பசுவின் கொடையையோ அதை செய்தவனின் கடின உழைப்பையோ யாரும் விவரித்துக்கொண்டிருப்பதில்லை.

ஏன் ஒரு பெண்னின் அழகை பற்றிய கேள்விக்கு மட்டும் அவள் அழகை பற்றிய பதிலை சொல்லாமல் தத்வார்த்தமான பதிலையே இந்த சமூதாயம் சொல்லிக்கொண்டிருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. Literal லாக இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் ஏன் இத்தனை பிடிவாதம்? அழகாய் இருப்பது அவ்வளவு பெரிய பிழையா என்ன?

அழகில் என்ன இருக்கிறது மனதுதான் அழகு என்று சொல்லிக்கொண்டிக்கும் நீங்கள் அழகாய் இருக்கும் பெண்களின் மனது நன்றாய் இருக்காது என்ற எண்ணத்தை மறைமுகமாக எல்லோர் உள்மனதிலும் விதைத்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையா?

அழகாய் இருந்தாலும் பழகிப்பார்த்தால்தான் அவளுடைய குணம் தெரியும் என்ற சொல்லில் அழகானவளை உங்கள் உடமை ஆக்கிக்கொள்ளும் உள்ளுணர்வும், அதில் தோற்றால் உங்கள் மனதை தேற்றிக்கொள்ள நீங்கள் செய்திருக்கும் முன்னேற்பாடுகளும் பொதிந்திருப்பது உங்களுக்கு தெரியவில்லையா?

அழகால்தான் அவளுக்கு வேலை கிடைத்தது, பதவி உயர்வு கிடைத்தது அழகால்தான் அவள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றுகொண்டிருக்கிறாள் என்று புலம்பும் நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. அவளுக்கு எல்லாவற்றையும் அவள் அழகை வைத்து வழங்கியவர்களின் மீதுதான் உங்களது விமர்சனம் இருக்கவேண்டுமேயொழிய அப்பழுக்கற்ற அவளின் அழகின் மீது அல்ல..

அழகை பற்றி வாய்திறந்தால் குணத்தை கையில் எடுப்பது தங்கள் தாழ்வுமனபான்மையை மறைக்க செய்யும் யுக்தி.. நாம் அழகாய் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளும் தைரியத்தால்தான் நாம் மிளிர்வோம் என்பதை நம்புங்கள்.

அழகான பெண்கள் அராத்தாய் இருக்கிறார்கள் என்பது உங்கள் குற்றசாட்டா? அது அவர்களின் தற்காப்பு ஆயுதமாக இருக்காலாம். விசாரித்துபாருங்கள் அவளுக்கு அற்புதமான ஒரு காதல் இருக்காலாம்.

கடைசியாக ஒன்று,

அழகை வைத்து எதையும் எடை போட கூடாது,
அழகோடு எதையும் எடை போட கூடாது.

இதுவே எனது பார்வை..

நன்றி.

பதில்: அருள் குமரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.