தினமும் பலமுறை கடைகளில் பலமுறை காப்பி குடிக்கும் நபரா நீங்கள்..! உங்களுக்கான பதிவு

0 736

செலவிடுவதை விட்டு சேமிக்கத் தொடங்க, பின்வரும் சில யுக்திகளைப் பின்பற்றலாம்.

1. வரவு செலவு கணக்கைத் தொடங்குங்கள்; ஒவ்வொரு பைசா செலவையும் கணக்கில் வையுங்கள். இவ்வாறு கணக்கு எழுதும் போது, பணம் எவ்வாறு விரயமாகிறது என்பது தெரிய வரும். மாத கடைசியில், வரி வரியாக செலவுகளைப் படித்து, எதை இனிமேல் தவிர்க்க அல்லது குறைக்க முடியும் என்று திட்டமிடுங்கள்.

2. திட்டமிட்டு(Budget) செலவழியுங்கள்; ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு செலவு வகைகளுக்கும் பணத்தை ஒதுக்குங்கள். அந்த பணத்தை தாண்டாமல், அதற்குள்ளேயே செலவை கட்டுக்குள் வைத்திருங்கள். உதாரணமாக, வெளியே சென்று உணவு உண்ண ரூபாய். 1000 ஒதுக்கியிருந்தால், ரூபாய். 1000 தாண்டாமல், அதற்குள்ளாகவே, செலவை வைத்திருங்கள். ரூபாய். 1000 தொட்ட பின், அடுத்த மாதம் தான் இனிமேல், வெளியே சென்று உணவு என்று செலவை அடுத்த மாதம் தள்ளிப் போடுங்கள்.

3. சேமிப்பை தானியங்கியாக மாற்றுங்கள்; மாதா மாதம் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து விட்டு, பின்னரே, மிச்சத்தை செலவழியுங்கள். இதனை, டேவிட் பாக் எழுதிய தனிமனித நிதியின் பிரபல புத்தகம் Automatic Millionaire விவரிக்கிறது.

நாம் பொதுவாக இவ்வாறு வாழ்ந்து வருகிறோம்.

வருமானம் – செலவு = மிஞ்சியது சேமிப்பு

நாம் இவ்வாறு மாற வேண்டும்.

வருமானம் – சேமிப்பு = மிஞ்சியது செலவு

குறைந்தபட்சம் 15% வருமானத்தை சேமிக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானலும் இருக்கலாம். சிலர் வருமானத்தின் 50% சேமிப்பிற்கு ஒதுக்குகிறார்கள்.

சேமிப்பானது, வெறும் சேமிப்பாக இல்லாமல், முதலீடாக மாற்ற வேண்டும். முதலீடானது பணத்தை பன்மடங்கு பெருக்கி, பணவீக்கத்தினை வெல்ல வைக்கும்.

4. காபி விளைவினைப்(Latte Effect) பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்; பிரபல தனிமனித நிதி ஆலோசகர் டேவிட் பாக், தனது உரையின் போது, பார்வையாளர் ஒருவரை பார்த்து எவ்வளவு முறை அவர் தினமும் 5 டாலர்கள் ஸ்டார்பக்ஸ் காபி அருந்துவதால், அந்த சிறிய செலவு எவ்வாறு பன்மடங்கு பெருகி, பெரும் செலவாகிறது என்று கூறுகிறார்.

30 நாட்கள் x 5 டாலர்கள் = 150 டாலர்கள்

12 மாதங்கள் x 150 டாலர்கள் = 1800 டாலர்கள்

தினமும் வெளியே காபி குடிப்பதனால், 1800 டாலர்கள் வருடா வருடம் செலவாகிறது. இதற்கு பதிலாக அவர் வீட்டிலேயே காபி குடித்திருந்தால்

30 நாட்கள் x .5 டாலர்கள் = 15 டாலர்கள்

12 மாதங்கள் x 15 டாலர்கள் = 180 டாலர்கள்

இவ்வாறு வீட்டிலேயே, அவர் தினமும் காபி குடிக்கும் பட்சத்தில், 1620 டாலர்கள் அவர் சேமித்திருக்கலாம். அதனை முதலீடு செய்யும் பட்சத்தில், அது பன்மடங்காக பெருகி, எதிர்காலத்தில் உதவும்.

( இதை நீங்கள் குடிக்கும் காப்பியின் விலையோடு ஒப்பிட்டு பாருங்கள்)

இது காபி மட்டுமல்ல, சஞ்சிகை வாங்குவது, பஜ்ஜி, போண்டா சாப்பிடுவது, சிகரெட் பிடிப்பது என்று எதுவாகவும் இருக்கலாம். தினம் தினம் செய்யும் சிறிய செலவு, எவ்வாறு பன்மடங்கு பெருகி, பெரிய செலவாகிறது என்று காபி விளைவு கூறுகிறது.

5. நேரத்தின் ரூபாய் மதிப்பினை அறிந்துக் கொள்ளுங்கள்; நீங்கள் தினமும் 8 மணி நேரம் வேலை பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வாரம் 40 மணி நேரம் வேலை பார்க்கிறீர்கள். ஒரு மாதம் 160 மணி நேரம் வேலை பார்க்கிறீர்கள்.

உங்களது மாத சம்பளம் ரூபாய். 16,000 என்று கணக்கில் கொண்டால், ஒரு மணி நேரம் வேலை பார்ப்பதற்கு உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் ரூ. 100

ஒரு சட்டை வாங்க வேண்டுமென்று எண்ணுகிறீர்கள். சட்டையின் விலை ரூ. 1500. நீங்கள் அந்த சட்டையை வாங்குவதற்கு 15 மணி நேரம் உழைப்பினை ஈடாக கொடுக்கிறீர்கள். அந்த சட்டையின் மூலம் இழந்த பணத்தை, மறுபடி சேர்க்க நீங்கள் 15 மணி நேரம் உழைக்க வேண்டும். அவ்வளவு தூரம், அந்த சட்டை மகத்துவம் வாய்ந்ததா, இல்லையென்றால், ரூ 500 செலவழித்து குறைந்த செலவில் சட்டை வாங்கிக் கொள்ளலாமா என்று யோசியுங்கள்.

இவ்வாறு யோசிக்கும் போது, நீங்கள் பணத்தை பணமாக பார்க்காமல், உங்களது நேரம் சார்ந்த உழைப்பாக பார்க்கிறீர்கள். பணத்தை வீணாக செலவு செய்வது குறையும்

பதில்: வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்

பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.