பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்களைப்பார்த்து நல்ல இரத்தம் ஓடுகிறதா..?

0 749

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்களைப்பார்த்து நல்ல இரத்தம் ஓடுகிறதா? என்று பிரதமர் மோடி கேட்கிறார்

பிரதமரின் இந்த பேச்சுகுறித்தான விவாதம்
இந்திய தொலைகாட்சியான ஜீ டிவியில் நடந்தது.

இதில் பங்குகொண்ட
நால்வரில் மூன்றுபேர் “தேசபக்தி இல்லாதவர்களை மோடி கிழித்து தொங்கவிட்டுள்ளார். இப்படித்தான் சுருக்கென்று கேட்கவேண்டும் இவர்கள் பாகிஸ்தானின் கைகூலிகள் இவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும்” இதில் உச்சபட்சமாக இவர்களை நடுரோட்டில் வைத்து கொல்ல வேண்டுமென்றெல்லாம் பேசினார்கள்.

நான்காவது ஒரு நபர் மிக அமைதியாக இருந்தார். நிகழ்வு ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு பிறகு தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் பெயர் தேவேந்திர பால் சிங் இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் கார்கில் போரில் காலை இழந்தவர்

என்று அறிமுகம் செய்தார்கள்

அவர் பேசத்தொடங்கினார்.

“இந்தியாவெங்கும் ஊட்டப்படும் தேசபக்தி வெறியையும் போர் நாட்டத்தையும் ஆரம்பத்திலேயே கடுமையாகச் சாடினார். அவர், “நீங்கள் எல்லோரும் இன்னொரு போர் பற்றிப் பேசுகிறீர்கள். போரின் அவலத்தின் எல்லைகள் உங்களுக்குத் தெரியுமா” என்று சக பங்கேற்பாளர்களிடம் கேள்வி எழுப்ப, அனைவரும் ஆடிப்போனார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் கார்ஹில் போரில், ஒரு காலை இழந்தவன். நான், எனது ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக ஏழு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டியிருந்தது. அப்போது, எங்கே போனது உங்கள் தேசபக்தி. இராணுவ வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் இறந்துவிட்டால், அவர்களது மனைவிமார் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து, தங்களுக்கான நிவாரணம் பெற வழக்காடி தான் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களின் எத்தனை பேருக்கு தெரியும். முடிவெய்தாத இவ்வாறான ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. போர் வேண்டும் என்கிறவர்கள், இராணுவத்தில் குடும்பத்தவரை உடைய குடும்பங்களிடம், ‘போர் வேண்டுமா’ என்று கேளுங்கள். ‘உங்கள் குடும்ப உறுப்பினரை, இழக்கத் தயாரா’ என்று கேளுங்கள். பழிக்குப் பழி, அதற்குப் பழி என்ற சுழற்சியில் உயிரிழப்புகளே மிஞ்சும். தீர்வை நோக்கிச் சிந்திப்போம்; அடுத்த தலைமுறைக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டிய பொறுப்பு எம்மிடம் உண்டு” என்று பேசினார்.

மேலும் இப்படியெல்லாம் பேசினால் பாகிஸ்தானிற்கு போ! இவர்களை கொல்லவேண்டுமென்று பேசுகிறீர்களே என்னைவிடவா உங்களெல்லாம் தேசபக்தி இருக்கிறது. நான் இராணுவத்திற்காக எனது காலை இழைந்தவன் என் தந்தை உயிரோடு இழந்திருக்கிறேன். என் குடும்பத்தில் பலபேரை இராணுவத்தில் இறந்திருக்கிறேன், இந்திய இராணுவத்திற்காக எங்கள் பஞ்சாப் மண்ணில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை உங்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.. ஆகவே இதுபோன்ற வெற்றுக்கூச்சல் போட்டு உங்கள் அரசியல் செல்வாக்கை வேண்டுமானால் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் நாட்டிற்கு கேடு செய்கிறீர்கள் என்பதை என்னால் ஆணித்தரமாக சொல்லமுடியும் என்று சொல்லி முடித்தார். அந்த விவாத்தின் போக்கு மட்டுமல்ல அங்கிருந்த மற்ற மூவரின் போக்கையே அவரின் பேச்சு மாற்றிவிட்டது.

ஆக போர் வேண்டுமென்று கூவுகிறவர்கள் யாரும் போரில் பங்கேற்பதில்லை; போரில் சாவப்போவதுமில்லை; அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.ஆனால் அவர்கள் தான்
போரின் மொழியை பற்றி பேசுகிறார்கள். ஊடகங்களில் கூவுகிறார்கள்; அவர்களே, போரை விற்கவும் செய்கிறார்கள்.

முன்பு, போர்களுக்காக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது, உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை விற்பதற்காகப் போர்கள் உருவாக்கப்படுகின்றன. போர், மிகப் பெரியதொரு வியாபாரம். அது, மரண ஓலங்களையோ, இழந்த உடமைமைகளையோ, அநாதைகளையோ அறியாது.

ஆனால் இதையெல்லாம் தெரியாத சில அதையே தொடர்ந்து பேசுகிறார்கள். தேசபக்தியின் பெயரால், தேசியத்தின் பெயரால் அதைத் தொடர்ந்தும் உச்சரிக்கிறார்கள். அயோக்கியர்களின் கடைசிக் புகலிடம் தேசபக்தியே என்று மெய்ப்பிக்கிறார்கள்.

இங்கே பிஜேபியை விமர்சிக்கிறான் என்று கூவ ஒரு கூட்டம் தயராக இருக்கும் புகழ காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் தயாராக இருப்பார்கள் ஆனால் இதற்கு அப்பாற்பட்டதே தேசபக்தி

Kondalsamy

You might also like

Leave A Reply

Your email address will not be published.