எது  எப்படியோ சின்னதம்பிய கொலைபண்ணாம கொண்டு வந்து விட்டா சரி..!

0 294

டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள்ளது.

கோவை மாவட்டம் பெரிய தாடகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னதம்பி என்ற ஆண் யானை கடந்த சில மாதங்களாக மலை அடிவாரத்தில் மலைப்பகுதியில் ஆக்கிரமித்து உள்ள வீடுகளில் உள்ள மக்களை அச்சுறுத்திகிறது என்று புகர் கொடுக்க

இதையடுத்து கடந்த 25-ம் தேதி வனத்துறையினர் சின்னதம்பி யானையைப் பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். தடாகம் வனப்பகுதியில் 4 கும்கி யானைகள் துணையுடன் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை லாரி மூலம் உலாந்தி வனச் சரகத்தில் நள்ளிரவு 2 மணிக்கு விடப்பட்டது.

சின்னதம்பி கழுத்தில் மாட்டப்பட்ட ரேடியோ காலர் கருவி மூலம் உலக வன உயிரின மையத்தினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 26 மற்றும் 27-ம் தேதிகளில் உலாந்தி, மானம்பள்ளி வனசரகப் பகுதிகளில் காணப்பட்ட சின்னதம்பி யானை பின்னர் ஆழியாறு பீடர் கால்வாய் வழியாக வனப் பகுதியில் இருந்து கீழே இறங்கி மயிலாடுதுறை, பொங்காளியூர் கிராமங்களில் உள்ள தென்னந்தோப்புகள் வழியாக பயணித்து கோட்டூர் பேரூராட்சியில் உள்ள குமரன் கட்டம் பகுதியில் காலை 7 மணிக்கு ஊருக்குள் நுழைந்தது.

இதையடுத்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம், வனவர் பிரபாகரன் கார்டு சுரேஷ் ஆகியோர் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுவினர் சின்னதம்பியை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறைக்கு போக்கு காட்டிய சின்னதம்பி அங்கலகுறிச்சி கிராமத்தில் ஜெஜெ நகர் அருகில் மீண்டும் விளை நிலங்களில் நுழைந்து வனத்துறையினரை அலைக்கழித்தது

தற்போது சின்னதம்பியை கும்கியாக மாற்றவேண்டும் என்று ஒரு அறிக்கையை அமைச்சர் விட்டுள்ளார்..!

எது எப்படியோ சின்னதம்பிய கொலைபண்ணாம இருந்த இடத்திலயே கொண்டு வந்து விட்டா சரி..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.