தம்பி நீங்க எத்தன மரக்கன்று வச்சாலும் அது வளராது. ச்சை என்டா மனுசனுங்க நீங்க

0 463

இப்படிதான் வீட்டின் உரிமையாளரிடம் கூறினேன்
“உங்கள் வசதிக்கேற்ப வேறு கிரகத்தில் குடியேற வேண்டியது தானே! ????

நாங்கள் நடும் மரக்கன்றுகளை
நீங்கள் ஏன் பிடுங்கி எறிகிறீர்கள்!
அதற்கு பதில்
1. வீட்டுக்குள் காய்ந்த இலை விழும்.
2. மரத்தின் கிளை தடுப்பு சுவர் தாண்டி உள்ளே வரும்.
3. பூச்சி பட்ட வரும்.
4. வேலி கம்பிகள் மர கிளைகளால் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.

தம்பி நீங்க எத்தன மரக்கன்று வச்சாலும் அது வளராது.
என்ன?
அவர் சிரித்து கொண்டே ஆமா தம்பி
எதுவும் வளர கூடாதுன்னு Sulphur சல்பர் பொடியை மண்ணில் தூவியுள்ளேன்.

ஏன் அண்ணன் இவ்வளவு குரூரம்…
2014ல் நாங்கள் மரக்கன்றுகள் நட்டோம் இதே இடத்தில், உங்கள் தகப்பனார் எங்களோடு சண்டையிட்டு, பின் ஒரு நாள் அனைத்து கன்றுகளையும் பிடிங்கி எறிந்தார்.

தற்போது நீங்கள்…

நாங்கள் 50க்கும் மேல் களப்பணியாளர்கள் கடினமான உழைப்புக்குபின்னும், எங்களை நம்பி இலவசமாக மரக்கன்றுகளும், ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு வேலியும் உதவியாக பெற்று நாளை இவைகளை மரங்களாக பூமியை பசுமை ஆக்கும் கணவோடு இருக்கிறோம், ஆனால் நீங்கள் ஒரே நாளில் அதற்கு தீ வைத்து சாம்பல் ஆக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உங்களுக்கான இடம் நீங்கள் எழுப்பியுள்ள பாதுகாப்பு சுவரோடு முடிந்து விட்டது, அதற்குள் தாங்கள் மரங்களை வெட்டுங்கள், செடி கொடி புற்களை வெட்டுங்கள் நான் அறிவுரையோடு, நகர்வேன்.
பொது இடம் என்றால் சற்று கடினதோடு கண்டிப்பென்.
நீங்கள் எத்தனை முறை பிடிங்கி எறிந்தாலும், மீண்டும் மீண்டும் நடுவேன்…

கோபத்தோடு நகர்ந்தேன்…

ரசாயனத்தால் நாங்கள் வைத்த மரக்கன்றுகள் வளர முடியாமல் துடிக்கின்றன…
வாழ்க மனிதம்

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.