மாடு வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு, கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

0 449

கறவை மாடுகளுக்கு மடி வீக்கம் என்பது தற்போது சாதாரணமாக நிலவிவரும் பிரச்சனை.

மடி வீக்கம் நோய் 95% கலப்பின மாடுகளுக்கு தான் அதிக அளவில் வரும்.

வட இந்திய நாட்டின மாடுகளுக்கும் வரும் பத்தில் ஒரு மாட்டுக்கு.

நம்ம ஊரு நாட்டு மாடுகளுக்கு மடி நோய் ஏதோ நூரில் ஒரு மாட்டுக்கு வரும்.

மடி வீக்க நோய் பெரும்பாலும் இளங்கன்று மாடுகளுக்கும் பால் கறவை அதிக உள்ள மாடுகளுக்கு அடிக்கடி வரும்.

காரணம் மாடுகளுக்கு அதிக பால் தருவதற்கு நாம் கொடுக்கும் கலப்பு தீவனம் தான் காரணம்.

கலப்பு தீவனம் கொடுத்தால் பால் அதிக சொரப்பு எடுக்கம். அதிக பால் சொரக்கும் மாடுகளுக்கு அளவை மீறி பால் சொரப்பதால் தான் மடி நோய் வருகிறது.

மடி நோய் வந்த மாடுகளின் மடி கல் போன்று இருக்கும் மடி தொட்டு பார்த்தால் தெரியும்.

மடியில் உள்ள பாலை சுத்தமாக கறந்து அந்த பாலை கட்டுத்தரை அமைந்து இருக்கும் இடத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

இப்போது மடி வீக்கத்து நோய் போக்க மருந்து செய்ய தேவையான பொருட்கள்

கற்றாலை -1 மடல் (தோல் சீவி சதை பகுதியை பிறித்து எடுத்து கொள்ளவும்)

மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

எலுமிச்சை- 1 1/2 பழம்

சாக்பீஸ் – 4

வெற்றிலை- 5

சாக்பீஸ் பொடி செய்து கொள்ளவும். கற்றாலை ,மஞ்சள் தூள் , எலுமிச்சை சாறு, வெற்றிலை சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கவலையுடன் சாக்பீஸ் பவுடரையும் சேர்த்து பாதிக்கப்பட்ட மாட்டின் மடியின் முழுவதுமாக தேய்த்து விட வேண்டும். இது போல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தேய்த்து விட வேண்டும். தொடர்ந்து செய்தால் மடி வீக்கம் குறையும்.

#SKCRF
#CONSERVEKANGAYAM
#CONSERVENATIVECATTLE
#KANGAYAMBULL

மேலும் தகவல்: Senathipathi kangayam cattle research foundation

You might also like

Leave A Reply

Your email address will not be published.