2000 ஆண்டு பழமையான தானிய சேமிப்புக் கிடங்கு கண்டுப்பிடிப்பு !

0 200

விழுப்புரம் மாவட்டம், குறும்பன்கோட்டையில், 2,000 ஆண்டுகள் பழமையான தானிய சேமிப்பு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ளது, குறும்பன்கோட்டை. குறும்பர் என்ற பழங்குடி இன மக்கள் அதிகம் வாழும் இந்த ஊரில், ஏனாத்துார் சிறி சரசுவதி விசுவ மகாவித்யாலயா கல்லுாரியின், சமசுகிருதம் மற்றும் இந்திய கலாசாரத்துறை பேராசிரியரும், புவிதொல்லியல் ஆய்வாளருமான, எஸ்.ராமகிருட்டிண பிசிபதி, அகழாய்வு பணியை மேற்கொண்டார். மே, 26ல் துவங்கி, சூன் 20 வரை நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட, மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, எஸ்.ராமகிருட்டிண பிசிபதி கூறியதாவது:

எஸ்.சண்முகவேல் என்ற ஆய்வு மாணவரும், நானும், குறும்பன்கோட்டை பகுதியில் ஒரு மாதம் அகழாய்வு மேற்கொண்டோம். அங்கு, பல்லவர்களுக்கு முற்பட்ட காலத்தில் வசித்த குறும்பர்களின் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த அதில், குறும்பர் இனத் தலைவன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. குறும்பன்கோட்டையில், ஒரு கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், தனியாருக்கு சொந்தமான வயல் வெளியிலும் அகழாய்வு செய்தோம். அங்கு, இரண்டு வகையான மண் மாதிரிகள் கிடைத்துள்ளன. கோவில் நிலத்தில், சிவப்பு மண்ணும்; வயல் வெளியில், சாம்பல் கலந்த கறுப்பு மண் மற்றும் மணல் கலவையும் கிடைத்துள்ளன. குறும்பன்கோட்டை பகுதி, நீண்ட காலமாக பாசனப் பகுதியாகவும், சூளைப் பகுதியாகவும் இருப்பதால், பல தொல் தடயங்கள் அழிந்துள்ளன. இருந்தாலும், இரண்டு இடங்களில் கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில், ஒன்று, மக்கள் வாழ்விடமாகவும்; மற்றொன்று, தலைவனின் தானிய சேமிப்பு கிடங்காகவும் இருந்தது தெரிய வந்துள்ளது. மக்கள் வாழ்விடப் பகுதி, சற்றே மேடாக உள்ளது. அங்கு, சிவப்பு நிற மட்பாண்டம், வெயில் மற்றும் நெருப்பில் சுடப்பட்ட செங்கற்கள், அடுப்பு, மெழுகப்பட்ட தரை, ஆபரண மணிகள், மண்கெண்டியின் மூக்கு, கூரை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

தாழ்வான பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில், பரந்து விரிந்த மண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன நெடுஞ்சுவர்கள் காணப்படுகின்றன. கூரைக்கான தடயங்கள் ஏதும் அங்கு கிடைக்கவில்லை. அதனால், ஓலை, கீற்று போன்ற ஏதாவது ஒன்றாலான தற்காலிக கூரை அமைக்கப்பட்டிருக்கலாம் என, கருத முடிகிறது.

அந்த அறைகளில், தானியங்கள் சேமிக்கப்பட்டு இருந்ததற்கு சான்றாக, தற்போது, கருகிய நிலையில் அரிசி கிடைத்துள்ளது. இதன் அமைப்பு மற்றும் பரப்பளவை வைத்து பார்த்தால், அது, குறும்பர் இனத் தலைவனுக்கு சொந்தமான தானிய சேமிப்பு கிடங்காக இருந்திருக்கலாம்.

மேலும், பல வகை மணிகள், ஓடுகள், பல வடிவ சிவப்பு மண்பாண்டங்கள், பல அடுக்குகள் மற்றும் அளவுகள் உடைய சுட்ட மண் உறைகளால் ஆன, உறைகிணறுகள், சுட்ட செங்கற்கள், உலோக கருவிகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

மேலும், குறும்பன்கோட்டைக்கு அருகில் உள்ள போயப்பாக்கத்தில், சுடுமண் உறைகிணறுகள், நுண் கற்கருவிகள், நுண்கலை பொருட்கள் செய்ததற்கான மூல கற்கருவிகள், சரளைக்கற்களும் கிடைத்துள்ளன. குறும்பன்கோட்டையில் மரத்தண்டு, வேர் ஆகிய பாகங்கள், கல்மரங்களாகக் கிடைக்கின்றன. அதனால், அங்கிருந்த மரங்கள், பெருமழையால் பெயர்க்கப்பட்டு, தாழ்வான திருவக்கோட்டை பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு, மண்ணால் மூடப்பட்டிருக்கலாம். மேலும், அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி, அதன் காலத்தை துல்லியமாக சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

          கண்டுப்பிடிக்கப்பட்ட பொருட்களின் படங்கள்

விழுப்புரம மாவட்டம், குறும்பன்கோட்டையில், 2,000 ஆண்டுகள் பழமையான தானிய சேமிப்பு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ளது, குறும்பன்கோட்டை. குறும்பர் என்ற பழங்குடி இன மக்கள் அதிகம் வாழும் இந்த ஊரில், ஏனாத்துார் சிறி சரசுவதி விசுவ மகாவித்யாலயா கல்லுாரியின், சமசுகிருதம் மற்றும் இந்திய கலாசாரத்துறை பேராசிரியரும், புவிதொல்லியல் ஆய்வாளருமான, எஸ்.ராமகிருட்டிண பிசிபதி, அகழாய்வு பணியை மேற்கொண்டார். மே, 26ல் துவங்கி, சூன் 20 வரை நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட, மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, எஸ்.ராமகிருட்டிண பிசிபதி கூறியதாவது:

எஸ்.சண்முகவேல் என்ற ஆய்வு மாணவரும், நானும், குறும்பன்கோட்டை பகுதியில் ஒரு மாதம் அகழாய்வு மேற்கொண்டோம். அங்கு, பல்லவர்களுக்கு முற்பட்ட காலத்தில் வசித்த குறும்பர்களின் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த அதில், குறும்பர் இனத் தலைவன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. குறும்பன்கோட்டையில், ஒரு கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், தனியாருக்கு சொந்தமான வயல் வெளியிலும் அகழாய்வு செய்தோம். அங்கு, இரண்டு வகையான மண் மாதிரிகள் கிடைத்துள்ளன.

கோவில் நிலத்தில், சிவப்பு மண்ணும்; வயல் வெளியில், சாம்பல் கலந்த கறுப்பு மண் மற்றும் மணல் கலவையும் கிடைத்துள்ளன. குறும்பன்கோட்டை பகுதி, நீண்ட காலமாக பாசனப் பகுதியாகவும், சூளைப் பகுதியாகவும் இருப்பதால், பல தொல் தடயங்கள் அழிந்துள்ளன. இருந்தாலும், இரண்டு இடங்களில் கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில், ஒன்று, மக்கள் வாழ்விடமாகவும்; மற்றொன்று, தலைவனின் தானிய சேமிப்பு கிடங்காகவும் இருந்தது தெரிய வந்துள்ளது. மக்கள் வாழ்விடப் பகுதி, சற்றே மேடாக உள்ளது. அங்கு, சிவப்பு நிற மட்பாண்டம், வெயில் மற்றும் நெருப்பில் சுடப்பட்ட செங்கற்கள், அடுப்பு, மெழுகப்பட்ட தரை, ஆபரண மணிகள், மண்கெண்டியின் மூக்கு, கூரை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

தாழ்வான பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில், பரந்து விரிந்த மண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன நெடுஞ்சுவர்கள் காணப்படுகின்றன. கூரைக்கான தடயங்கள் ஏதும் அங்கு கிடைக்கவில்லை. அதனால், ஓலை, கீற்று போன்ற ஏதாவது ஒன்றாலான தற்காலிக கூரை அமைக்கப்பட்டிருக்கலாம் என, கருத முடிகிறது.

அந்த அறைகளில், தானியங்கள் சேமிக்கப்பட்டு இருந்ததற்கு சான்றாக, தற்போது, கருகிய நிலையில் அரிசி கிடைத்துள்ளது. இதன் அமைப்பு மற்றும் பரப்பளவை வைத்து பார்த்தால், அது, குறும்பர் இனத் தலைவனுக்கு சொந்தமான தானிய சேமிப்பு கிடங்காக இருந்திருக்கலாம்.

மேலும், பல வகை மணிகள், ஓடுகள், பல வடிவ சிவப்பு மண்பாண்டங்கள், பல அடுக்குகள் மற்றும் அளவுகள் உடைய சுட்ட மண் உறைகளால் ஆன, உறைகிணறுகள், சுட்ட செங்கற்கள், உலோக கருவிகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

மேலும், குறும்பன்கோட்டைக்கு அருகில் உள்ள போயப்பாக்கத்தில், சுடுமண் உறைகிணறுகள், நுண் கற்கருவிகள், நுண்கலை பொருட்கள் செய்ததற்கான மூல கற்கருவிகள், சரளைக்கற்களும் கிடைத்துள்ளன. குறும்பன்கோட்டையில் மரத்தண்டு, வேர் ஆகிய பாகங்கள், கல்மரங்களாகக் கிடைக்கின்றன. அதனால், அங்கிருந்த மரங்கள், பெருமழையால் பெயர்க்கப்பட்டு, தாழ்வான திருவக்கோட்டை பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு, மண்ணால் மூடப்பட்டிருக்கலாம். மேலும், அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி, அதன் காலத்தை துல்லியமாக சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

          கண்டுப்பிடிக்கப்பட்ட பொருட்களின் படங்கள்

(செய்தி : தினமலர்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.