தமிழக பாரம்பரிய நாய்கள் இனப் பெருக்க மையத்தை மூட வைத்த பீட்டா (PETA)..?

0 575

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு நாய் இனப்பெருக்க மையத்தை இரண்டு மாதங்களில் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலில் சல்லிக்கட்டு, இப்போது நாட்டு நாயினம். தமிழின அடையாளங்களை ஒழிக்க களமிறங்கியிருக்கிறதா பீடா (PETA). இந்தப் பதிவை கட்டாயமாக படித்துவிட்டு பகிருங்கள் …

கோம்பை

கடந்த 1980-ஆம் ஆண்டு, சென்னை சைதாப்பேட்டையில் அரசு நாய்கள் இனப்பெருக்க மையம் தொடங்கப்பட்டது. இங்கு நாட்டு நாய்கள், சிப்பி பாறை, ராஜ பாளையம் மற்றும் கோம்பை உள்ளிட்ட உள்நாட்டு நாய் வகைகளை பாதுகாக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இங்கு, குறைவான எண்ணிக்கையில், இனப்பெருக்கம் செய்யப்பட்டாலும், குறைந்த விலை காரணமாக, உள்ளூர் நாய் வகைகளை வாங்க, ஏராளமானோர், முன்பதிவு செய்து, நீண்ட நாட்களாக காத்திருப்பதுடன், குறிப்பாக, ‘ராசபாளையம்’ நாய் குட்டிகளை வாங்க ஏராளமானோர் முன்பதிவு செய்து வாங்கி வந்தனர். இதற்காக கடும் போட்டி நிலவும்.


இராசபாளையம் நாய்

இந்நிலையில்,
இந்த மையம் போதுமான பராமரிப்பு இல்லாமலும், தொற்று நோய்களை பரப்பும் இடமாகவும் செயல்பட்டு வருகிறது. பராமரிக்கப்படும் நாய்களுக்கு முறையான உணவு, தண்ணீர் கூட சரிவர வழங்கப்படுவதில்லை எனக் கூறி, ‘பீட்டா’ என்ற விலங்குகள் நல அமைப்பு சம்பந்தப்பட்ட மையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று, கடந்த 2013-இல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சைதாப்பேட்டை நாய் இனப்பெருக்க மையத்தில் விலங்குகள் நல வாரியம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, விலங்குகள் நல வாரியத்தின் முக்கிய விதிகள், நிபந்தனைகளை பின்பற்றபடவில்லை. ஆகையால், தோல் நோய் போன்ற நோய்கள் அதிகளவில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் அந்த மையத்தை மூட பரிந்துரைத்தது. ஆனால், மையத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

கன்னி

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மையத்தின் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இரண்டு மாதங்களுக்குள் நாய் இனப்பெருக்க மையத்தை மூடும்படியும், விலங்குகள் நல வாரியத்தின் உதவியுடன் அங்குள்ள நாய்களுக்கு மறுவாழ்வு வசதிக்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

 

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு :

‘ நாட்டு நாய்களின் இனத்தை அழிக்கும் நோக்கத்திலேயே சைதாப்பேட்டையில் உள்ள இனப்பெருக்க மையத்தை மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், நாட்டு மாடுகளை அழிக்க திட்டமிட்டு சல்லிக்கட்டுக்கு விலங்கு நல அமைப்புகள் போராடி தடைபெறுவது போல், நாட்டு நாய் இனங்களை அழிக்க இத்தகைய முயற்சிகள் நீதிமன்றங்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாகவும் ‘ சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

‘சுகாதாரமும், பராமரிப்பும் இல்லைன்னா அதை நடைமுறைப்படுத்த சொல்லலாம். இல்லையெனில் நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம் இல்லை அதனை முறைப்படுத்த வாரியத்தினை நடவடிக்கை எடுக்க சொல்லலாம் அல்லது அழுத்தம் கொடுக்கலாம். அதை விட்டுட்டு மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தலாமா??’ என்றும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

‘ இந்தியாவில் நீதிமன்றத்தை நம்பி வழக்கு போட்டு, வாய்தா மேல் வாய்தா என சாகும் வரை நீதி கிடைக்காது தேங்கிய வழக்குகள் பல இலட்சம் இருக்கும். இதையே காரணமாக கொண்டு நீதித் துறையையே கலைத்து விட முடியுமா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களுக்கு மட்டும் தீர்ப்பும் தடை உத்தரவும் உடனே கிடைப்பது எப்படி ?? ‘ என்றும் மற்றொரு சாரர் கேள்வி எழுப்புகின்றனர்.

இம்மையத்தை மூட 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதமே பீடா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பல்லாண்டுகளாக சல்லிக்கட்டை தடை செய்யச் சொல்லி போராடிய நிலையில், அண்மையில் தான் கோகோ கோலா நிறுவனம் பால் விற்பனையை துவக்கியது குறிப்பிடத்தக்கது.
முதலில் நாட்டு மாடு! இப்போ நாட்டு நாய் ???

உண்மையில் நம் நாட்டு நாய்களே வளர்ப்பதற்கு சிறந்த வகைகள். அவற்றை பழக்கப்படுத்துவதும், புரிந்துகொள்வதும் எளிது என்பதுடன், குறைந்த உடல்நிலைக் குறைபாடுகள் கொண்டவையாகவும் இருக்கும். நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைகளும் அவையே என்று நாய்களை வளர்க்கும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


சிப்பிப்பாறை

கோம்பை, சிப்பிபாறை போன்றவற்றை ஆபத்தான இனங்கள் போல் சித்தரித்து நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது பீட்டா அமைப்பு. நாட்டு நாய்கள் குறித்த தகவல்களையும் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இனப்பெருக்க மையத்தில் கோம்பை வகை நாய் கூண்டை கடித்து துப்பியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இவை இனப்பெருக்க மையத்தில் இருந்தால் மற்ற நாய்களுக்கு பாதிப்பு ஏற்படும்; இது வளர்ப்பதற்கான நாய் இல்லை என்பது போல சித்தரித்து வருகிறது.

சல்லிக்கட்டுக்குத் தடை விதித்து நாட்டு மாடுகளை ஒழிப்பது போல, நாட்டு நாய்களையும் ஒழிக்க நினைக்கிறார்களா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.