பலமுறை யோசித்த பின்பே எழுதுகிறேன்..! பொங்கலுக்கு எதற்காக ₹1000 பரிசு..?

0 921

பொங்கலுக்கு குடும்ப அட்டை ஒன்றிற்க்கு ₹1000 கொடுக்கிறார்கள் என்றவுடன் அடித்து பிடித்து நாம் முதலில் வாங்கிவிட வேண்டும் என்ற எண்னமே 90% குடிமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..!

இதில் ஏழை பணக்காரன் என்றெல்லாம் கிடையாது காரணம் ₹1000 என்றவுடன் அனைவருமே வரிசையில் நிற்கின்றனர்..!

இங்கு எங்களுக்கு பொங்கலுக்கு பரிசு தொகை 1000 வேண்டும் என்று எந்த ஏழையும் கேட்கவில்லை..! எந்த பணக்காரணும் வேண்டாம் என்று கூறவில்லை. காரணம் தமிழகத்தின் ஆரம்ப கால கட்டமைப்பு இது இலவசம் என்றால் மக்கள் சாதி,மதம், ஏழை, பணக்காரன் என அனைத்தையும் மறந்து வீதிக்கு வந்து கையேந்துவார்கள் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு உண்டு..!

உடனே நீ யோக்கியனா என்று பலரும் என்பக்கம் திரும்புவீர்கள் என்பதை நான் அறிவேன் காரணம் இதுவும் அடிமட்ட மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்க பலராலும் பரப்பப்பட்ட ஒரு கேள்வி..!

திட்ட திட்ட 258 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது இந்த 258 கோடியை வைத்து தாராளமாக 50000 நிரந்தர வீடுகள் கட்டி கொடுத்திருக்க முடியும்…! ஆனால் இதனை தமிழக அரசு செய்யவில்லை..!

கஜா புயலால் வீடுகளை இழந்து வீதியில் நின்றபோது இந்த 258கோடி எங்க சென்றிருந்தது..? இன்று வரை அவர்களின் இயல்புநிலை திரும்பாமல் குடிசை குடியிருப்பாளர்கள் தார்பாய்களிலே தூங்கி எழும் துக்கம் தமிழக அரசிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையோ..?

இலவசத்தால் மக்களை ஒன்றும் செய்யமுடியாது என்று நினைத்தால் நீ கூட இன்னும் அந்த அடிமை கட்டமைப்பில் வாழ்கிறாய் என்று பொருள்..! இலவசமாக வழங்கவேண்டிய தண்ணீரையும், மருத்துவத்தையும், கல்வியையும் வியாபாரமாக்கிவிட்டு இணையதளத்தை இலவசமாக வழங்கியதால் தமிழகம் கண்ட வளர்ச்சி தான் என்ன..?

குறிப்பு இதை படித்தவுடன் எனக்கு அந்த ஆயிரம் வேண்டாம் என்று மிக்சி, டீவியை உடைத்தது போல பணத்தையும் கிழித்துவிட வேண்டாம்..!

எங்கோ ஒரு ஏழைக்கு நீங்கள் வழங்கும் 1000 அவர்களின் 10 நாள் மகிழ்ச்சியை நீட்டிக்கும்..!

நன்றி..! பிடித்திருந்தால் பகிருங்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.