இனி அப்படி அல்ல‌ விதைகள் அவரின் சொத்துக்களாகிவிடும், ஓவ்வொரு முறை விதைக்கும் பொழுதும்

0 361

மரபணு மாற்ற பருத்தி விதை: அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மான்சான்ட்டோவுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் இப்பொழுதெல்லாம் மகா சர்ச்சையாகவே வருகின்றன‌.

முன்பு டெல்லி நீதிமன்றம் இந்த மரபணு மாற்ற பருத்திவிதை காப்புரிமை உட்பட ஒரு ராயல்டியிலும் மான்டோட்டா உரிமை கொண்டாட முடியாது என சொல்லியிருந்தது.

இனி அப்படி அல்ல‌

விதைகள் அவரின் சொத்துக்களாகிவிடும், ஓவ்வொரு முறை விதைக்கும் பொழுதும் அவர்களிடமே வாங்க வேண்டும், தன் நிலம் தன் உழைப்பு தன் பலன் என விவசாயி பயன்படுத்த முடியாது.

அதாவது நம் தோட்டத்தில் வாழை பயிரிடுகின்றோம், அது பலனளித்த பின் அந்த கன்றை பிடுங்கி நாமே நடுகின்றோம்.

அப்பொழுது ஒருவன் வந்து இந்த வாழைகன்றுக்கு எனக்கு கமிஷன் கொடு என்றால் எப்படி இருக்கும்? அதே தான் இது.

மரபணு மாற்றபட்ட பருத்திவிதைகளை அனுமதித்ததே தவறு, இதில் அவர்களுக்கு ராயல்டி வேறாம்.

பருத்தி பால் ஆரோக்கியமானது, மாட்டுக்கு பருத்தி விதை என்பதை எல்லாம் இனி மறந்துவிட வேண்டியது தான்.

ஏற்கனவே குற்றுயிராய் கிடக்கும் விவசாயம் மேல் மற்றொரு கத்தி உச்சநீதிமன்றத்தால் இறக்கபட்டிருக்கின்றது.

இதை எல்லாம் இங்கு விவாதிக்கும் ஊடகமுமில்லை, எடுத்து சொல்ல தலைவனுமில்லை தலைவியுமில்லை.

மொத்தத்தில் தொலைநோக்கு அரசியல்வாதி எனவோ, மக்கள் நலமிக்க ஊடகம் என்றோ ஒன்றுமே இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.