நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி… ஒரு மாதத்துக்கு முன் நண்பர் ஆசை எடுத்தது…!

0 441

““இது காட்டு யானம். 180 நாள் பயிர். நாங்க ஒருமுறை விதைச்சிட்டோம்னா அறுவடைக்குப் போனா போதும். தண்ணியில் நின்னா படகுல போய் அறுப்போம். தண்ணி இல்லன்னா ஆளுங்களை வச்சு அறுப்போம். அப்படிப்பட்ட நெல்லு.”

“ இலுப்பைப்பூச் சம்பா என்ற ரகத்தைக் கொடுத்த விவசாயி சொன்னார், “இது மூணுவேளை சாப்பாட்டுக்கான அரிசி இல்லை. காய்ச்சல், ஒவ்வாமை அப்படின்னு உடம்புக்கு ஏதும் முடியலன்னா இந்த அரிசியில கஞ்சி வெச்சிக் குடிச்சிட்டு ஓய்வெடுத்தா சரியாப்போயிடும்.” கேட்க அதிசயம்போல இருந்தது!”

தமிழ்நாட்டு ரகமே இன்னும் ஐந்நூறு நெல் ரகங்களாவது இருக்கலாம். ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு நெல் வகைகளை அந்தக் காலத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். திருமணக் காலத்துக்கு முன்பு மாப்பிள்ளைச் சம்பா, பின்பு கருப்புக் கவுணி, மகப்பேறு காலத்தில் பூங்கார், குழந்தை பிறந்த பிறகு பால் குடவாலை, குழந்தைக்கு ஆறு மாதத்தில் முதல் உணவாக வாடன் சம்பா.”

“ என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் மரபில் இழந்த விஷயங்களையெல்லாம் மீட்டெடுத்தால், அடுத்த பத்திருபது வருடங்களுக்குள் காவிரி விவசாயிகள் மீண்டும் தலைநிமிர்ந்துவிடுவார்கள்.

அதோடு, நம் தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவைச் சாப்பிடுவார்கள். அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. என்ன ஒரு வேதனை என்றால், நோய் என்னைக் கடுமையாகப் படுத்துகிறது. எனக்கு என்னுடைய குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கையெல்லாம் ஒரு பொருட்டல்ல. மக்களுக்காக ஓடுகிறோம். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நிறைய வேலை இருக்கும்போது பாதியைக்கூட முடிக்கவில்லையே என்ற கவலைதான் என்னைக் கடுமையாக வருத்துகிறது!”

போய்வாருங்கள் ஜெயராமன் அய்யா.
தலைமுறைகள் உங்களை வணங்கும், வாழ்த்தும்!

பதிவு: சேனாதிபதி காங்கேயம் காளை ஆராய்ச்சி பண்ணை

You might also like

Leave A Reply

Your email address will not be published.