கள்ளு இறக்க தடையும்,அரசின் பித்தலாட்டமும்..! தடை காரணம் இதுதான்

0 1,672

அது போதை தரும் என்பது காரணம் அல்ல …
(ஒயின் ஷாப்பை அரசாங்கமே அல்லவா நடத்துகிறது).
ஒவ்வொரு பனை மரமும் கள்ளு உற்பத்தி செய்யும் பாக்டரி, கள்ளில் போதை மாத்திரை கலந்து விற்கிறார்கள், ஒவ்வொன்றையும் அரசு கண்காணிக்க இயலாது. ஆனால் இங்கிலீஷ் சரக்குகள் குறிப்பிட்ட சில பாக்டரியில் மட்டுமே உற்பத்தி ஆகின்றன. எனவே கண்காணிப்பதில் சிரமம் இல்லை. எனவே கள்ளு உற்பத்தியை அரசு தடை செய்கிறது.

இது அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட காரணம்.

இத்தனை சற்று உற்று நோக்குவோம்.

இங்கிலீஷ் சரக்கில் போதைக்காக மாத்திரை கலந்து விற்றால் அரசு இங்கிலீஷ் சரக்கை தடை செய்துவிடுமா? இது ஒரு நொண்டி சாக்கு…
போதை மாத்திரை கலந்து விற்கிறார்கள் என்றால் அரசு ஒவ்வொரு மரமாக சென்று ஆராய தேவை இல்லை, போதை மாத்திரை என்ன மரத்திலா விளைகிறது? மாத்திரையை தடை செய்தாலே போதும்..
இங்கு பிரச்சனை போதை மாத்திரை தானே தவிர கள்ளு அல்ல. போதை மாத்திரை ஏன் தடை செய்யப்படவில்லை ? தடை செய்யப்பட்டது என்றால் அது எப்படி சாதரண மக்களுக்கு கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட ஒன்று சாதரணமாக மக்களுக்கு கிடைத்தால் அந்த அரசு செயல் இழந்துவிட்டது என்றுதானே பொருள்.

ஒரு மாத்திரையை தடை செய்ய அதிகாரம் இல்லாத அந்த அரசு ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டது என்றுதானே பொருள் .இல்லை அப்படி இல்லை என்றால் , அந்த மாத்திரையை தண்ணீரிலும் பாலிலும் கலந்து குடித்தாலும் போதை வரும் தானே!! அப்போது மக்களை காக்க அரசு என்ன செய்தது? உண்மையில் அரசு போதை மாத்திரை என்று சொல்லி கள்ளு என்றால் விஷம்தான் கிடைக்கும் என்று பொய் செய்தியை பரப்பி மக்களை இங்கிலீஷ் மது பானத்தை மட்டுமே குடிக்க வைக்கிறது. அது உண்மையில் அதிக அளவு சாராயம் உள்ளது , மிகவும் உடல் நலத்திற்கு கேடானது ஆனால் மது ஆலை முதலாளிகளுக்கும் அரசை ஆள்வோருக்கும் மிகவும் விருப்பமானது. இதற்கு பலமான சாட்சி உண்டு.

கேரளம் கர்நாடக அரசுகள் கள்ளை தடை செய்யவில்லையே , ஏன் ?அங்கு போதை மாத்திரை இல்லையா? இல்லை போலி அரசியல்வாதிகள் இல்லையா?

மனிதனின் ஈரலை கெடுக்கும் அந்நிய மது பானத்தை அரசு தடை செய்யாது !,
மழை நீர் பூமியினுள் செல்வதை தடுத்து மனித குல பேராபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக்கை அரசு தடை செய்யாது! ,
ஓசோன் மண்டலத்தை காலி பண்ணும் பிரிட்ஜ் இல் உபயோகிக்கும் CFC என்கின்ற குளிர்விப்பனை அரசு தடை செய்யாது!,
ஏரி குளம் வாய்க்கால் போன்ற முக்கிய நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசு, இனாமாக கட்சி மக்கள் ஆக்கிரமிப்பை பட்டா போட்டுக்கொள்வதை தடை செய்யாது!,
சாயப்பட்டறையின் சுத்திகரிக்காத கழிவு நீரினால் பல கோடி மக்கள் கேன்சர் , தோல் நோய் இன்ன பிற புதிய புதிய நோய்களினால் மெல்ல மெல்ல சித்ரவதையை அனுபவித்து இறக்கிறார்களே , அதனால் என்ன சாயப்பட்டறைகளை அரசு தடை செய்யாது!, குறைந்தபட்சம் கழிவு நீரை சுத்தம் செய்து வெளியிடுங்கள் என்றுகூட கேட்டுக்கொள்ளாது!

( கழிவை கடலில் கொட்ட பெரும் முயற்சி எடுக்கிற அரசு , கழிவை சுத்தம் செய்ய முயற்சி எடுக்கவில்லை. எல்லாம் பண முதலாளிகள் படுத்தும் பாடு .காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கள்ளை இறக்க அனுமதிக்க கூடாது என உண்ணாவிரதம் இருந்ததை மறக்கமுடியுமா! ஆனால் அரசு சாராயம் விற்கலாம், அப்போது இவரது காந்தியஸம் எங்கே சென்று தூங்குகிறது?.)

இவ்வாறு மக்களை வஞ்சம் தீர்த்து கொல்லும் அரசு நீதிமன்றத்தில் ஏன் மக்கள் மீது பாசம் கொண்டு கள்ளை தடை செய்தது?

பணம். மதுபானம் உற்பத்தி செய்கிறவர்கள் அரசுக்கு உற்பத்தி வரி செலுத்துகிறார்கள் (அதனை ஆராந்து பார்த்தால் தான் தெரியம் உற்பத்தியில் எவ்வளவு கருப்பு எவ்வளவு வெள்ளை என்று), பிறகு மேற்படி அரசை ஆள்பவர்களுக்கு கப்பம் ( ஆண்ட கட்சிகள் எதிர் கட்சிகளாக மாறி குற்றம் சாட்டுவதனால் ஒரு நல்ல பலன் பல பொதுவான உண்மைகள் வெளி வருகின்றன, அதில் ஒன்று இது ) கட்டுகிறார்கள்.ஆனால் கள்ளை இறக்கும் விவசாயி எப்படி கப்பம் கட்ட முடியும் ? அதனால் தான் கள்ளை இறக்கி எனது கப்பத்தில் கன்னம் வைக்காதே என்று விவசாயிகளை அரசு மறைமுகமாக மிரட்டுகிறது .

மற்றொரு காரணம் அரசுக்கு வருமானம் வருகிறது அதில் அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் , கலர் டிவி கொடுக்கிறார்கள் , அது இது என்று கேட்கவே புல்லரிக்கிறது. மக்களுக்கு தேவை இலவசங்கள் அல்ல! பாதுகாப்பு,
ஆம் சுதந்திரமாக நேர்மையாக சமுதாயத்தில் செயல்பட சட்ட விரோத , சமூக விரோத சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு( இது ஆளும் அரசியல் கட்சி மக்களுக்கு மட்டுமே இப்போது கிடைக்கிறது. காவல் துறை எப்போது தன்னாட்சி பெற்ற அமைப்பாக வருகிறதோ அப்போது ஒருவேளை இது அனைவருக்கும் கிடைக்கலாம் ), வேலைவாய்ப்பை உண்டாக்கும் நேர்மையான வெளிப்படையான அரசு மற்றும் அதன் எளிமையான நடைமுறைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம், இவை இருக்க வேலை வாய்ப்பு எளிதில் உண்டாகும்.

இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி திசை திருப்பி விட்டு , நாட்டை கொள்ளை அடிக்கும் அரசு அல்ல. நேர்மையாக, மக்களையும் நாட்டையும் பாதுகாக்கும் அரசு.

எனவே அரசு விவசாய மக்களின் வாழ்க்கை மேம்பட, அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்க , மக்களுக்கு மலிவான ஒரு மது பானம் கிடைக்க,
மக்களின் ஆரோகியம் மேம்பட அரசு மனம் மாறி ,விரைவில் கள்ளு இறக்க அனுமதிக்கும் என நம்புவோமாக . . .(வேறு என்ன செய்ய முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.