ஏன்டா தயக்கம்…? சும்மா கேளுடா…? அண்ணா அது இருக்காண்ணா..? 2018 கடைசி இரவில் கண்ட காட்சி

0 1,283

பரபரப்பான 2018 முடிவின் இரவில் நானும் நகரத்தை நோக்கி நகர்ந்தேன் 2019 வருகைக்காக அல்ல வேறு ஒரு வேளையின் காரணமாக..!

சந்தையில் சென்று காய்கறிகள் வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தேன் இடையில் நண்பர் ஒருவர் வந்து வா டீ குடித்து விட்டு போகலாம் என்க நானும் சரியென்று நடந்து இனிப்பு கடைக்கு(பேக்கரி) நகர்ந்தேன்..!

அங்கு 10வயது இருக்கும் இரண்டு சிறுவர்கள் வந்து அண்ணா ஒரு கிலோ கேக் எவ்வளவு என்று கடைக்காரரிடம் கேட்க அவரும் 200₹ என்று கூற சற்று யோசித்தான் பிறகு அரைகிலோ கேக் எவ்வளவு என்று கேட்க அவரும் மறுபடியும் 100₹என்று கூற மீண்டும் யோசித்தான்..!

அருகில் இருந்த மற்றோரு சிறுவன் அத கேளுடா என்று கேட்க தயங்கி கொண்டே இருந்தான்..! கடைக்காரர் என்னடா வேணும் என்று கேட்க தயக்கத்தோடே சுவீட் பீர் இருக்கா என்று நாசுக்காக கேட்டான்..! கடைக்காரர் இதகேட்க தான் இவ்வளவு தயக்கமா என்று அந்த சிறுவனை குசி படுத்திவிட்டு ₹32 தான் என்று கூற அருகில் இருந்த சிறுவன் ரெண்டு பாட்டில் வாங்குடா என்று சைகை காட்டினான்..!

இவை அனைத்தும் மூன்று நிமிடங்கள் அதாவது நான் ஒரு குவளை தேனீர் குடிப்பதற்குள் நடந்தது..!

இந்த சமூகத்தில் போதை ,மது, புகைப்பிடித்தல் போன்றவை தீமை சீரழிக்கும் என்பதை தாண்டி உன்னை உயர்த்தி விடும் இவையெல்லாம் கௌரவம் என்றே கற்பிக்கப்படுகிறது..!

அந்த சிறுவன் மீது இங்கு தவறேதும் இல்லை அவனை சார்ந்த சமூகத்தின் மீதே தவறு ..! அந்த சிறுவனை சுற்றியுள்ளவர்கள் புதுவருடத்திற்கு சரக்கு அடிக்கலாம் என்று பேசியதை கேட்டு இந்த சிறுவன் மதுக்கடைகளை தேடி செல்லமுடியாமல் இந்த முயற்சியில் இறங்கி இருக்காலாம்..,!

கடைக்காரர்களும் லாப நேக்கில் சிறியவர் பெரியவர் என்று பாராமல் போதை பொருட்களையும் அள்ளி தெளிக்கின்றனர்..!

சுவிட் பீர் போதை இல்லை, சாதாரண கூல்டிரிங்ஸ் என்று முட்டுகொடுக்க சில முற்போக்காளர்கள் வருவார்கள் என்பதை அறிவேன் அந்த முற்போக்காளர்கள் முட்டுச்சந்தில் நின்று முட்டிகொள்ளுங்கள்..!

நாளை மூலிகை சிகரெட், மூலிகை பீடி என்றெல்லாம் மருந்து கடைகளிலே விற்க போகிறார்கள் எப்படியும் இந்த சமூகத்தை சீரழித்து விட வேண்டும் என்று…!

பெற்றோர்கள் மட்டுமே இந்த சமூக சீரழிவிற்கு காரணமாக முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டே நகரும் நாமும், காரணமே..!

அந்த சிறுவனிடம் எதுக்குப்பா இது என்று கேட்ட போது புதுவருடத்தை கொண்டாட என்று சிரித்துக்கொண்டே சொல்கிறான்…!

எதை நோக்கி நகர்கிறது இந்த சமூகம்..? குட்க விற்க லஞ்சம் வாங்கிற ஊர்ல இதெல்லாம் பெரிதில்லை போல என்றே தோன்றுகிறது..!

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் மீது அக்கறையுடன் இருங்கள் சூழ்நிலை முடிவு செய்கிறது அவர்களின் பாதையை ஆகவே நல்ல சூழ்நிலையை உருவாக்குங்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.