பாதாம் பிஸ்தா ன்னு வாங்கி சாப்பிட்டு உடம்ப தேத்துப்பா..! இதெல்லாம் இன்னுமா நம்புறீங்க..?

0 6,411

என்னப்பா இவ்ளோ பலவீனமா இருக்க..
நல்லா பாதாம் பிஸ்தா ன்னு வாங்கி சாப்பிட்டு உடம்ப தேத்துப்பா..

அவனை பாத்தியா.. என்னமா ஆளு பளபளன்னு இருக்கான்..
பாதாமா தின்னு வளர்ந்தான் போல..

காலையில் ஊற வச்ச பாதாமை சாப்பிட்டா போதும்..
வேற உணவே தேவையில்லை.. – பேலியோ டயட்.

இப்படி பலரும் அன்றாட வாழ்வில் பேச கேட்டிருப்போம். பாதாம் அவ்ளோ உடம்புக்கு அவ்ளோ நல்லதா..? அதற்கு இணையாக வேறு இல்லையா..?

பாதாம் நல்ல பொருள்தான்.
ஆனால் அதை விட சிறப்பான பண்டம் உண்டு.

அப்படியென்றால் பாதாம் கிலோ 900 முதல் 1200 ரூபாய் வரை விற்கும் போது அந்த பண்டம் அதை விட விலை கூடுதலா இருக்குமே.. இதையே வசதி உள்ளவங்கதான் வாங்க முடிகிற சூழலில் அதை எல்லோராலும் வாங்க முடியுமா..?

நிச்சயமாக முடியும். அதுவும் கிலோ வெறும் 80 முதல் 140 ரூபாய்க்குள்ளாக..!
அதுதான் நம்ம ஊரு நிலக்கடலை.

பாதாம் என்பது தனிச்சிறப்பு என்பதால் ஏதாவது ஒன்னு ரெண்டு சத்து இதில் அதிகமாதானே இருக்கும்..

இல்லை.. நிலக்கடலையை ஒப்பிடும்போது பாதாமில் தான் சத்துக்கள் 10% முதல் 25% குறைவு. தவிர நிலக்கடலை சாப்பிட்டா மூளை வளர்ச்சியும் சிறப்பா இருக்கும். பாதாமுக்கும் மூளை வளர்ச்சிக்கும் தொடர்பு இல்லை.

அப்போ ஏன் பாதம் இவ்ளோ விலை விற்கிறது..? ஏன் எல்லோராலும் விரும்பப்படுகிறது..?

ஏன்னா, பாதாமுக்கு அவ்ளோ விளம்பரம். நிலக்கடலைக்கு யாரும் விளம்பரமே செய்யல..!

ஆனா.. பாதாம் போட்ட உணவுபொடிகள் அவ்ளோ ரம்மியமான வாசனை வருதே..!

உண்மையில் நிலக்கடலை தரும் வாசம், பாதாம் தரும் வாசத்தை விட சிறப்பானது. உணவுபொடிகளில் வரும் அலாதி மணம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை. மேலும் பாதாம் கலந்த உணவு என்றால் லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும் படி தருவார்கள். உண்மையில் பாதாமை வறுத்தோ, பொடித்தோ, ஊற வைத்தோ என்ன செய்தாலும் பளிச்சுனு வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.

அப்போ யாரு பாதாமுக்கு இவ்ளோ விளம்பரம் செய்றாங்க..?

அமெரிக்காக்காரன்..

சும்மா எதுக்கெடுத்தாலும் அமேரிக்காகாரனையே நொட்ட சொல்லாதீங்க..! பாதாம் ஆசியப்பயிர்.

ம். எந்த காலத்தில் இருக்கீங்க..? இன்னைக்கு அமெரிக்காதான் உலகில் அதிக அளவில் பாதாம் உற்பத்தி செய்யும் நாடு. இந்தியா பாதாம் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தாலும், குறைஞ்ச காசுக்கு எல்லாத்தையும் ஏற்றுமதி செஞ்சிட்டு, அமெரிக்கா தரும் பூஞ்சாண கொல்லி மருந்தடிச்ச பாதாமை அவங்க சொல்ற விலைக்கு இறக்குமதி செய்றாங்க.. அதுவும் இந்தியா இறக்குமதி செய்யும் பாதாம் அளவு குறைவா இருக்கு.. நீங்க இன்னும் அதிகமா நுகரனும்னு கட்டாயப்படுத்தவும் செய்றாங்க..!
அமெரிக்க பொருட்களின் விற்பனையை அதிகரிக்கத்தான் ஊருக்குள்ள பேலியோ டயட்டை மக்களிடம் முடுக்கி விட்டிருக்காங்க.

இப்போ என்ன செய்யனும்..?

நிலக்கடலை மற்றும் அதில் தயாரிக்கும் பண்டங்களை வாங்கி சாப்பிடுங்க. நீங்களும் நல்லா இருங்க.. உள்ளூர் விவசாயி, நிலக்கடலையை கொண்டு உணவுப்பொருள், எண்ணெய் தயாரிக்கும் உள்ளூர் ஆளுங்களும் நல்லா இருப்பாங்க. நம்ம உடம்பும், நாட்டின் பொருளாதாரமும் வலிமையா இருக்கும்.

முக்கியமா இதையும் பகிரனும் அப்போதான் உங்கள சுத்தி இருக்கவங்களுக்கும் தெரியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.