எது சுத்தமான நெய்? கண்டுபிடிக்க என்னதான் வழிகள்..? இதோ

555

மனம் வீசும் நெய்யை சமைக்கும் உணவுகளில் சேர்த்துகொண்டால் ருசியோடு சேர்த்து நல்ல மனமும் கொடுக்கும்.

நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெய்யானது பல்வேறு விதமான பிராண்டுகளில் கடைகளில் விற்கப்படுகிறது.

ஆனால், அவை அனைத்தும் சுத்தமான நெய்தானா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும்.

சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பதற்கு கீழே கூறப்பட்டுள்ள இந்த 2 வழிகளை பின்பற்றுங்கள்

சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது. எனவே, சிறிது நெய்யை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் வரை பாருங்கள்.

சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய் ஆகும்.இரண்டாவதாக, நெய்யை ஒரு வாணலியில் வைத்து சூடுபடுத்தும்போது அது உருகி Brown நிறத்தில் வந்தால் அது சுத்தமான நெய்.

அதனை தவிர்த்து, காலதாமதமாக உருகி, மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்படமான நெய் ஆகும்.

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.