என எத்தனையோ positive வான விஷயங்கள் இருக்கின்றனவே. இவற்றை பின்பற்றலாமே.‌‌‍..?

0 174

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம்70 ஆண்டுகள்.

பாலிய வயது முதல், பருவ வயது வரை: முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

வாழ்வின் கடைசி 20 வருடங்கள்: நாம் வாழ்ந்தும் பயனில்லை, வீட்டில் இருக்கும் Table,chair, போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்.

20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள்.அந்த 30தில் 10 வருடங்கள்: குறைந்த பட்சம் தினசரி
8 மணி நேரம் தூங்கி விடுகிறோம். மீதி இருப்பது: 20 வருடங்கள்.

இதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது. மீதி இருப்பதோ:
10 வருடங்கள். இதில்:

மனைவியோடு பிரச்சனைகள்,
குழந்தைகளோடு பிரச்சினைகள்,
உடல் நல குறைபாடுகள்,
என 2 வருடங்கள் போய் விடும்.

மீதி இருப்பது வெறும்: 8 வருடங்கள்.
அதாவது 2922 நாட்கள்.

நமது மன திருப்திக்காக,
இந்த 2922 நாட்களை வேண்டுமானால்
’round’டாக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,
வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்.

இந்த_3000 நாட்கள் வாழ்வதற்கு: மனம் நிறைய..?

வெறுப்பு, கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம், அகங்காரம், தலைக்கனம்,ஏளனம், சந்தேகம்,

என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில் இவற்றை பின்பற்றலாமே……

அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு,நம்பிக்கை, காதல், இயற்கை,உதவி, புன்னகை,கனிவு, குழந்தை, பாராட்டு,விட்டுக்கொடுத்தல், இறை பக்தி, குடும்பம், தன்னம்பிக்கை,மகிழ்ச்சி,சந்தோஷம்,

என எத்தனையோpositive வான விஷயங்கள் இருக்கின்றனவே.
இவற்றை பின்பற்றலாமே.

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும். தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும்.

அது நெருப்பாகவே இருந்தாலும் கூட. ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பை உமிழாமல், எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

அனைவரும் பகிருங்கள் சிலருக்காவது புரியட்டும்

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.