ஆண்களைவிட பெண்கள் சக பெண்களிடம் பொறாமை கொள்வதற்கான காரணங்கள் எவை..?

0 512

பலவிதமான உளவியல் காரணங்கள் உண்டு.

மிக சிறிய அளவிலான சதவிகிதம் பெண்கள் மட்டுமே மற்ற பெண்களை வாழ விடுகிறார்கள் என்றால் மிகை இல்லை. பல இடங்களில் மருமகள்கள் தற்கொலை செய்து கொள்வது, திடீர் விபத்து என்ற பெயரில் அவர்களை கொலை செய்வது, மாமியார்களை வீட்டை விட்டு விரட்டுவது, அவர்களை காயப்படுத்தி முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது எல்லாவற்றிற்கும் இந்த அடிப்படை உளவியல் பொறாமை பிரச்சனையே காரணம் !

இதை பற்றி இன்னும் விழிப்புணர்வு இல்லை psychology (உளவியல்) காரணங்களை பற்றி ஆராய்ச்சிகள் அவ்வளவு பேசப்படுவதில்லை.

முதல் மிக பெரிய காரணம், ஓர் ஆண் போட்டி என்ற உந்துதலால் (அவனுடைய ஹார்மோன் ) உந்தப்படுகிறான், அவனது இயக்கம் போட்டியிலே தொடங்குகிறது. பொதுவாகவே நீங்கள் பார்த்தால் மற்ற ஆணிடம் தன்னால் இது முடிய வில்லை, அது முடியவில்லை “உன் சம்பளம் எவ்வளவு?” போன்ற விஷயங்கள் அவர்கள் பேசுவதிலை. உளவியல் காரணம் தான் மட்டுமே தன் துணைவிக்கு அழகனாகவும், உயர்ந்தவனாகவும், பணக்காரனாகவும், சுருக்கமாக சொன்னால் ராஜா போல தெரிய வேண்டும் என்கிற அடிப்படை எண்ணமே.

அவர்கள் ஒருவர்க்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு தன் சொத்தை (தன் மனைவியை) உச்சகட்ட சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பும், அவள் தன்னை மட்டுமே காண வேண்டும் என்பதற்காக இயன்ற வரையில் கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்கிறாரகள்.

பல மாப்பிள்ளைகளுக்கு மாமனார்களை பிடிக்காது. என் நண்பர்கள் சிலர் தோழி என்ற முறையில் இதை வெளிப்படையாக என்னிடம் கூறியது உண்டு. தன் மனைவி அப்பாவிடம் மிகுந்த அன்பு கொண்டு அவரோடு அடிக்கடி பேச அதையும் இவர்கள் போட்டியாகவே (சிறிய அளவிலாவது ) எடுத்து கொள்வர்.

தன் மனைவி அடிக்கடி மாமனார் வீட்டிலே தங்குகிறார் என்பதற்காக தோழர் ஒருவர் இயன்றவரையில் வீட்டை மாற்றி கட்டி சுவர்க்க பூமியாக்க முயன்றார். அவள் என்ன கேட்டாலும் அதையே செய்தார்.

ஆக இதில் போட்டி அதிகம். இப்பொழுது பெண்கள் விஷயத்துக்கு வருவோம். தன் ஆண்மகனுக்கு(கணவனுக்கு) இன்னொருத்தி அழகாக தெரிந்து விடுவாளோ? அவனுடைய அன்பிற்கு வேறு ஒருத்தி வந்து விடுவாளோ? அவள் தான் மட்டுமே சிறந்த இணையாக தெரிய வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறாள் .

பெண்கள் மற்ற பெண்களிடம் தங்கள் கஷ்டங்கள், பிரச்சனைகள் பற்றி அடிக்கடி பேசி கொள்வார்கள். அவர்கள் ஹார்மோன் பேசி, கனிவாக இருத்தல், ஒருவற்கு ஒருவர் பரிமாறுதல் போன்ற இயக்கங்களால் உந்த படுகிறது. ஆண்களுக்கு போட்டி தரும் அவர்கள் உளவியல் மூளை மற்றும் ஹார்மோன் உந்துதல்களே பெண்களுக்கு அவர்கள் உணர்வுகள், ஹார்மோன் பொறாமை தருகிறது. ஹார்மோனை மட்டுமே இங்கு குறை கூற முடியாது.

கோள் சொல்வது, பொய் சொல்வது, இன்னொரு பெண் அழகானவராக இருந்தால் தன்னோடு உடனே ஒப்பிட்டு தாழ்ந்து போகுதல் , தன் கணவன் விட்டுவிடுவாரோ என்ற பயத்தால், பாதுகாப்பு இல்லாத தருணங்களினால் தன் பொறாமையை உச்சகட்டமாக வெளிக்காட்டுவர்.

எவ்வளுவுக்கு எவ்வ்ளவு ஆண் போட்டியால் முந்துகிறானோ முயற்சி செய்கிறானோ இவர்கள் பின் வாங்கி பொறாமையில் பின் செல்வர். வேலைகளில் பெண் அதிகாரி தனக்கு கீழே சிறந்த பெண் பணியாளரிடம் பொறாமை பட்டால் அவளை ஒரு வழி பண்ணுவதும் இதனால் தான்.

இவர்கள் ஹார்மோன் மற்றும் இம்மீடியட் உடனடி நடவடிக்கை கோள் சொல்வது, பொறாமை மூலம் மிகவும் காயப்படுத்துவது தான். அவர்களிடம் போட்டி ஆண் ஹார்மோன் இல்லை மற்றும் அது பயன்படாது.

மிகு சிறந்த பயிற்சி மூலமாகவும், இறைவன் அனைவரையும் தனி தன்மையோடு படைத்திருக்கிறார் என்ற அறிவாலும், தன் கணவனிடமிருந்தோ, வேலையிலிருந்தோ பிற அழகான, திறமையான, தகுதியான பெண்களால் எல்லாவற்றையும் எடுத்து கொள்ள முடியாது என்ற உண்மை பலருக்கு விளங்குவதில்லை.

இதனால் அழகான, கவர்ச்சியான, வசீகரமான, திறமையான, தகுதியான பல பெண்களை பார்த்து பெரும்பான்மையான பெண்ணினம் பொறாமையால் காயப்படுத்துவது உண்மை. வேதனைக்குரிய விஷயம் என்ன என்றல், மிகவும் வசீகரமான கட்டான உடல் அமைப்பு உடைய பெண்களும், பெண்மை அதாவது ஆங்கிலத்தில் மிகவும் அழகான வார்த்தை(femininity /feminine ) பெண்மைக்குரிய அடக்கம், கனிவு, வெட்கம், கண்ணால் பேசும் அழகு, புன்னகை, கூச்சம், நளினம் போன்ற பெண்மை அதிகமாக வெளிப்படும் பெண்கள் இந்த இரு வகையான பெண்கள் பிற பெண்களால் மிகவும் மிகவும் சொல்ல முடியாத அளவிற்கு காயப்படுத்தப்படுவர்.

இரண்டாம் வகை(feminine ) ஏன் என்றால் பெண்பால் தன்மை, பெண் தன்மை (femininity) அதிகம் இருக்கின்ற பெண்களை ஆண்களுக்கு மிகவும் அதிகமாக பிடிக்கும், இதுவும் உலக அரங்கில் முற்றிலும் உண்மை.

நான் படித்த ஆராய்ச்சி கட்டுரைகள், உளவியல் புத்தகங்கள், மற்றும் வாழ்க்கை சம்பவங்களை வைத்து இந்த பதிலை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன். மற்றபடி பெண் மூளை இணைப்புகள் (neuron connectivity ) மூலமாக பல உணர்வுகள், மூன்று குணங்கள் ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு வருகின்றன.

ஆண்களிடம் ஒரு சமயத்தில் ஒரே குணம் மட்டும் தான் வெளிப்படும், மற்றும் (boxed/compartmental thinking) பெட்டிகளில் நாம் அடுக்கும் பொழுது ஒன்றை எடுப்போம் மற்றொன்றை வைப்போம் அது போல அவர்கள் தனித்தகனியாக ஆராய்ந்து புரிந்து கொள்வர்.

இந்த பொறாமை மனிதர்களுக்கு மிகவும் சகஜம். ஆனால் தன் தனித்தன்மை, அடக்கம், கனிவு, இறைவனை பற்றிய சிந்தனை, இறைவனால் படைக்கப்பட்ட உயர்ந்த காரணம் என்ன என்பதை தேடுதல், எந்த உயிராலும் தனக்கு தீங்கு நேராது என்பதை தெளிவாக உணர்தல், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் சொன்னதை உணர்தல் , போன்ற உயர்ந்த குணங்களால் உந்தப்பட்ட பெண்கள் ஒரு பொக்கிஷம்

பதிவு: நித்திய கோபாலன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.