போதை எங்கு உருவாகியது எப்படி வியாபாரமாக்கப்பட்டது தெரியுமா..?

0 325

மதுவை முற்றிலும் ஒழிக்க முடியாது.ஒழிக்க முயன்றால் மது மாபியாக்கள் உருவாகுவார்கள்-கமல்

காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் . அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது. அது தான் போதையைத் தந்த பீர்.

மனிதன் கண்டறிந்த முதல் பானம் பீர் தான்.
முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்கவைத்தபோது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது.

பீருக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த பானம் வைன் .பழச்சாறைப் புளிக்கவைத்துக் கிடைப்பது வைன் . வைனைக் காய்ச்சி வடிகட்டினால் கிடைப்பது பிராந்தி .பீரைக் காய்ச்சி வடிகட்டும் போது கிடைப்பது விஸ்கி .

கரும்புச் சக்கையிலிருந்து வீரியமிக்க மது செய்யலாம் என்பதை 1657 -ல் ரம்புல்லியன் என்பவர் கண்டுபிடித்தார் . குடித்தவுடன் வெறிக்கச் செய்யும் அந்த மதுவின் பெயர் ரம். அந்தப் பயபுள்ள அது பெயரையே வச்சிருச்சு.

எத்தியோப்பியாவில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சில ஆடுகள் ஒரு செடியின் காய்களைத் தின்று விட்டு துள்ளிக் குதிப்பதைப் பார்த்தான். அவனும் அந்த விதைகளைத் தின்று பார்த்தபோது புத்துணர்ச்சி உண்டானது .அந்தக் காய் தான் காபி.

4700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனப் பேரரசர் ஷென் நுங் காட்டிலே தண்ணீர் கொதிக்க வைத்துக் கொண்டிருந்த போது சில இலைகள் காற்றில் அடிபட்டு நீரில் விழுந்தன . அந்த நீரை அரசர் பருகியபோது புத்துணர்வு பெற்றதுபோல உணர்ந்தார்.
அது தான் தேநீர்.

சீனாவின் தேயிலை ஆட்சியை முறியடிக்க பிரிட்டன் முடிவு செய்தது . இந்தியாவில் அதை எங்கே வளர்க்கலாம் என ஆராய்ச்சி செய்தபோது அஸ்ஸாமில் ஏற்கனவே தேயிலை காட்டுச்செடியாக வளர்ந்தது தெரியவந்தது . இந்தியாவில் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது .

இன்று உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முதல் இடம். தேயிலை உற்பத்தி செய்ய அழித்த காடுகளும்,அழிந்த மனிதர்களின் கண்ணீர் கதை தனி வரலாறு.

மதுவின் வாசனை அறியாத புதியதலைமுறை இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறது.உலகம் முழுக்க மது இருந்தாலும் இந்தியாவில் மதுவிலக்கு சாத்தியம் என்றார் காந்தி.

மது அருந்துவது பாவங்கள் அனைத்துக்கும் தாயாகும். மது அருந்துபவர்,பெற்றோரைத் துன்புறுத்துபவர், கூட்டிக் கொடுப்பவர்.இவ்ர்கள் யாரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றார் நபிகள் நாயகம்.

மூன்றுபடி அரிசி திட்டத்தை அமுல்படுத்த அரசுக்கு வருவாயாக மதுக்கடைகளைத் திறக்கலாம் என ஆலோசனை சொன்ன போது “ஆட்சியே போனாலும் அந்த பாவத்தைச் செய்ய மாட்டேன்” என்றார் அண்ணா.

காந்தியின் கொள்கையான மதுவிலக்கை சேலத்தில் முதலில் அமுல்படுத்தி இறுதிவரை உறுதியாக இருந்தவர் ராஜாஜி.

குடிபோதை குற்றங்களைத் தூண்டும்.அந்த வருமானம் பாவத்தின் கூலி என்றும், இதில் ஒரு ரூபாய் வருமானம் வந்தால்,குற்றங்களைத் தடுக்க இரண்டு ரூபாய் செல்வாகும் என்றார் காங்கிரசைத் தொடங்கிய வெள்ளையன் ஆலம் ஆக்டேவியன் ஹியூம்.

தெளிவாக யோசிக்கும் ஒவ்வொரு மனிதனும் இழி பொருளாகிய மதுவை முற்றாக வெறுத்து ஒதுக்குவான் என்கிறார் இங்கர்சால்.

கள்ளுண்ணாமையைக் கடை பிடிக்க குறளில் கடுமையாக வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

மனிதன் தோன்றிய காலம் முதல் மதுவும் தொடர்ந்து பயணிக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
இதன் அளவு கூடியது ஏன் என்றால்

மனிதர்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளான உணவு,உடை,உறைவிடம்,கல்வி,மருத்துவம் ஆகியவற்றை பெரு முதலாளிகள் நலன் சார்ந்த அரசாங்கம் செய்ய இயலாது.

அந்த நாட்டு மக்களை அடிப்படை பிரச்சனைகளிலிருந்து மடைமாற்றம் செய்யும் கருவியாக மதுவை அரசே கையில் எடுத்து போதையில் மூழ்க வைப்பதே இது வரையிலான வரலாறு.

போதை கூடியதால் பிரச்சனைகள் அதிகமானதா?
பிரச்சனைகள் அதிகமானதால் போதைகள் கூடுகிறதா?
இரண்டிற்குமான தொடர்பை அறிந்தாலே போதையை அழித்துவிடலாம்.
அரசே இங்கு போதையில் இருந்தால்?

விபச்சாரத்தையும் ஒழிக்க முடியாது. அதற்காக
அரசின் சார்பில் குறைந்தபட்சம் ஊர்கள் தோறும் விபச்சார விடுதிகள் அமைக்கலாமா?

மக்கள் சார்பாக நின்றால் மதுவை ஒழிக்கலாம்
மாபியா சார்பாக நின்றால் முடியாது.

ஏதோ உண்மையை கூறுகிறோம் புரிந்துகொள்வதும் தெரிந்துகொள்வதும் உங்கள் கைகளில் தான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.