பாட்டில்கள் விற்பனையாகும் மிக மோசமான விசத்தன்மை வாய்ந்த குளிர்பானங்கள் எவை என்று தெரியுமா உங்களுக்கு..?

401

செவன் அப், ஸ்பிரைட் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் வாங்குகிறீர்கள்..?சரி யாருக்காக அதனை வாங்கி பருகாகிறீர்கள் அதில் பழச்சாறு உள்ளதா..? இல்லை வேறு ஏதேனும் சத்துக்கள் உள்ளதா..? எதுவுமே இல்லாத போது எதற்காக அதனை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்..? ஒரே ஒரு காரணம் தான் விளம்பரம்

கோலா பெப்சியில் என்ன உள்ளது என்று தெரியுமா .? நிறமிகளுக்காக ஏதோ ஒரு சாயம் இனிப்புக்காக சிறிது சர்க்கரை நுறைக்க சிறிது கேஸ் சரி இதில் வேறு என்ன சத்துக்கள் உள்ளது என்று வாங்குகிறீர்கள்..? அதற்கு காரணம் விளம்பரம்

அடுத்தபடியாக Maza slice இதில் என்ன உள்ளது என்று வாங்குகிறீர்கள் ஏன் உங்களுக்கு எளிதில் கிடைக்கும் மாம்பழத்தை வாங்கிப் சாறு பிழிந்து பருகினால் உங்களுக்கு ஆரோக்கியம் தானே..?

எவனோ எங்கோ வியாபாரத்திற்காக ஏதேதோ கலக்கும் ஒன்றை வாங்கி நீங்கள் குடிக்க வேண்டிய அவசியம் என்ன இதற்கும் காரணம் விளம்பரம்

அதாவது விளம்பரத்திற்காக ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் அடுத்தவர் அதை வாங்கினால் அதை வாங்க நீங்களும் ஆசைப்படுகிறீர்கள் அடுத்தவன் இறக்கிறான் என்று நீங்கள் இறக்க ஆசைப்பட்டுள்ளீர்களா..?

விலை உயர்ந்த அன்னிய நாட்டு குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்து, மலிவு விலையில் கிடைக்கும் நம்மூர் குளிர்பானங்களான மோர், கம்மங்கூழ், இளநீர் போன்றவற்றை அருந்தியும், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டும் உடலைக் குளிர்ச்சியாக்கி நீண்ட நாள் வாழலாமே…!

டப்பாவில் அடைக்கப்பட்டு விற்பனையாவது நம்மூர் பானமாகவே இருந்தாலும் அதில் நஞ்சு கலக்கப்படுகிறது என்பதை மறவாதீர்..!

எலும்பிச்சை மாதுளை தர்பூசணி இளநீர் வெள்ளரி மாம்பழம் போன்றவைகளை நீங்களே சாறுபிழிந்து குடியுங்கள் இது மட்டுமே கலப்படமில்லாதவை

பொதுநலன் கருதி வெளியிடுவோர்..!

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.