கண்களை விற்று சித்திரம் வாங்கும் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை:

548

சேலம் – சென்னை இடையே 277.3 கி.மீ தூர எட்டு வழிச் சாலை அமைக்க,
11 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து 92 கிராமங்கள், 7500 ஏக்கர் விளை நிலங்கள், 500 ஏக்கர் அடர் வனங்கள், 750 கிணறுகள் அழிக்கப்படுகின்றன.

இதனால் 7 ஆறுகள், 8 மலைகள் பாதிக்கப்படும் ஆபத்திருக்கிறது.

பாதிக்கப்படும் அடர் வனப்பகுதிகள்:
i).சேலம் மாவட்டம்:
சேர்வராயன் மலை வடக்கு,
ii). தருமபுரி மாவட்டம்:தீர்த்தமலை அரூர்.
iii). திருவண்ணாமலை மாவட்டம்:செங்கம், போலூர், திருவண்ணாமலை, சாத்தனூர், ஆரணி.
iv). காஞ்சிபுரம் மாவட்டம்:செங்கல்பட்டு வனப்பகுதி

வனத்தை விளை நிலத்தை அழிப்பதை மறைக்க பசுமை வழிச்சாலை எனும் பொய்யான ஏமாற்றுப் பெயர் வேறு.

ஒருமரத்தைக்கூட வைத்து வளர்க்க திராணியற்ற அரசுகளே!

இதனால் அடையப்போகும் வளர்ச்சி தான் என்ன? அது யாருக்கான வளர்ச்சி!

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.