உங்களுக்கு அலர்ஜி இருக்கா..? உங்க வீட்டிலேயே மருந்து இருக்கே..!

0 418

அலர்ஜியானது தூசி, பூச்சிக்கடி மற்றும் உணவுப்பொருட்களால் ஏற்படுகிறது.

அத்துடன் தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் காரணிகள், தூசிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இருக்கும் போது அலர்ஜி ஏற்படுகிறது.

இதனை போக்குவதற்கான வீட்டு மருந்துகள்

சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால், சற்று நேரத்தில் அரிப்புகள் போய்விடும். இது ஒரு சிறந்த பலனையும் தரும்.

பாதாம் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து, சிறிது சர்க்கரை கலந்து, தினமும் இரண்டு முறை பருகினால், அரிப்புகள் போய்விடும்.

பப்பாளி விதையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனால் அரிப்புகள் எளிதில் குணமாகிவிடும்.

எலுமிச்சை சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவ வேண்டும்.
கசாகசா விதைகளுடன், தண்ணீர் மற்றம் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினால் உடனே அரிப்புகளானது போய்விடும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.