இனி போடா விளக்கெண்ணை அப்புடின்னு திட்டும் போது இதுதான் ஞாபகம் வரனும்.!

0 684

விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி’ என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள்தான் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன.

சுருக்கமாக, விளக்கெண்ணெய் ஒரு நலப்பொக்கிஷம்!
ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு நீங்கும்.
முடி வெடிப்புக்கள் அதிகம் இருப்பின், விளக்கெண்ணெயை முடியின் முனைகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள்.
விளக்கெண்ணெயில் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும். அதற்கு வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
நீளமான கண் இமைகள் வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன் விளக்கெண்ணெய் கண் இமைகளில் தடவுங்கள். இதனால் கண் இமைகள் நீளமாக வளரும்.


விளக்கெண்ணெயை தலைமுடிக்கு அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.
விளக்கெண்ணெய் குடலில் உள்ள புழுக்களை அழிப்பதுடன், மலச்சிக்கலில் இருந்தும் விடுவிக்கிறது.

ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.

சமீபத்திய ஆய்வுகள் ஆமணக்கு இலை, கல்லீரல் நோய்க்கு எதிராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. காமாலை, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் செயல்திறன் குறைவுக்கு ஆமணக்கு இலையின் உலர்ந்த பொடி பயனளிக்கும்.

நோய் குணமாக்கலில் `நிணநீர் கழிவு ஓட்டம்’ (Lymphatic drainage) மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் (Inflammation) கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்னிகரற்றச் செயலை இந்த எண்ணெய் செய்கிறது..

You might also like

Leave A Reply

Your email address will not be published.