40 ஆண்டுகளை தாண்டியும் கேட்டு கொண்டே இருக்கிறது. மறக்க முடியுமா அந்த சத்தத்தை…??

0 1,260

நண்பரின் பெயரும் தேவை இல்லை.,
பிறந்த இடமும் தேவை இல்லை.,,
ஆனால் அன்பரின் சத்தம் 40 ஆண்டுகளை தாண்டியும் கேட்டு கொண்டே இருக்கிறது. மறக்க முடியுமா அந்த சத்தத்தை…??
அந்த குரல் எள்ள்ளுளு…. புண்ணாக்கெய்ய்ய்…..!!!

முதல் தெருவில் சத்தமிட்டார் என்றால் கடைசி தெரு வரை எதிரொலிக்கும். நம்ம சுற்று வட்டார ஊர்களில் திருவிழா என்றால் அதற்கு முந்தைய தினம் சரியாய் ஆஜராகி இருப்பார்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் மரியாதையாகத்தான் அழைப்பார்.
அவர் அணிந்திருக்கும் சிவப்பு கலர் தலைப்பாகையை(முண்டாசு) அவ்வளவு எளிதில் யாரும் மறப்பதில்லை. அவருடைய முதல் சந்திப்பே எள்ளு புண்ணாக்கினை சற்று சுவைத்துதான் பாருங்களேன் என்று விடாப்பிடியாக தந்து விடுவார்.

இளைத்தவனுக்கு எள்ளு என்று சும்மாவா பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்?
எள்ளு சாப்பிட்டால் கொளு கொளு என மாறுவார்கள்.
கொள்ளு சாப்பிட்டால் இளைத்து போவார்கள்.
இரண்டுமே உடம்புக்கு ஆரோக்கியமான விஷயம்தான்.

இந்த கலி காலத்தில் குழந்தைகளும் சரி, பெரியவர்கள் குழந்தைகளுக்கும் சரி kurkure, pingo, lays, kindar joy போன்ற விஷ பொருட்களை (அதுவே கவுரவமாக கருதுகிறார்கள்) வாங்கி கொடுகிறார்களை தவிர நம்ம ஊரு பண்டத்தில் முக்கியமான பண்டம் எள்ளு புண்ணாக்கு போன்றவற்றை யாரும் விரும்பாதது காலத்தின் கோரம்.

அவரின் இன்னொரு வியாபார பொருள் அவல். குசேலனிடம் கண்ணன் மயங்கிய அதே அவல் தான். அப்படியொரு சுவை.
இந்த இரண்டும் இவருடைய கை பக்குவத்தில் 40 வருடம் பாராம்பரியமாக சுவை உள்ளவை.

என்னவோ பாரம்பரியமாக வந்தது PIZZA தான் என்று சொல்லுவார்கள் போல. பீட்சா வும் பர்கரும் நம் ஆயுளை பருக வந்தவே ஆகும்.
நம் பாரம்பரிய தின் பண்டங்களை மறக்க வேண்டாம் மக்களே.
மேலும்….

ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளவா? என்று கேட்டேன்.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெஞ்சினார் வேண்டாம் என்று.
விடாப்பிடியாக அவர் எனக்கு எள்ளு புண்ணாக்கு தந்தது போல
நானும் விடாப்பிடியாக ஒரு புகைப்படம் எடுத்து கொண்டேன்.
பேஸ்புக் என்றதும் ஏற்கனவே முத்துகிருஷ்ணப்பேரியில் ஒரு தம்பி என்னை பேஸ்புக்ல போட்டாங்க.. நீங்களுமா? என்று கேட்டார்.

நல்ல விஷயங்களை யார் பிரதிபலித்தாலும் தவறில்லை என்று விடைபெற்றேன்.
அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.
இலவசமாக மட்டும் வாங்கி சாப்பிட மனம் ஒப்பு கொள்ளவில்லை.
ஒரு அரை கிலோ அவர் விற்பனை செய்யும் விலையில் வாங்கி கொண்டேன்.
பாரம்பரியம் மீது நமக்கும் நம் வட்டார மக்களுக்கும் ஒரு பிரியம் இருப்பது நிதர்சனமே..!
நன்றி
அன்னாரின் பெயர் – மாயாண்டி
ஊர் – கீழப்பாவூர்

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.