உட ல் நலக்கு றை வால் தி டீரெ ன உயி ரிழ ந்த பிரப ல பின் ன ணி பா டகர் ..!! இ சைத்து றை க்கே ஒரு பே ரிழ ப்பு ..!! இரங் க லை தெரி விக் கும் திரை ப்பிரப லங்க ள் மற் று ம் ரசி கர் கள்..!!

0 920

இந்திய சினிமா உலகில் பிரபல பின்னணிப் பாடகராக இருந்து வந்தவர் தான் கிருஷ்ணகுமார் குன்னாத் . இவரை பெரும்பாலும் கேகே என்றுதான் அழைப்பார்கள் . டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், இந்தி ,மலையாளம் போன்ற பல மொழிகளில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார் .இவர் பின்னணி பாடகராக மட்டுமல்லாமல் பாப் மற்றும் ராப் இசை பாடகராகவும் இருந்தவர்.

குறிப்பாக தமிழில் காக்க காக்க படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே என்ற பாடலைப் பாடி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்  பாடகர் கே கே.  பின்னர் இதனை தொடர்ந்து சாமி படத்தில் இடம்பெற்ற கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா,  கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படி போடு ,

அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தில் இடம் பெற்ற காதல் வளர்த்தேன் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் விரைவில் வெளியாக இருக்கும் தி லெஜன்ட்  படத்திலும் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இப்படியான நிலையில் கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் நஸ்ருல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடும் போது கே கேவிற்கு  உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது . இதனால் அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் . பின்னர் தீவிர சிகிச்சை அளித்தும் ,

அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .இவரின் திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் , ரசிகர்கள் என அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் . மேலும்  பிரதமர் மோடி கூட தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாடகர் கே கேவின்  மறைவிற்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.