யாரு கிட் டயும் இல் லாத கெட் டப்பழ க்கம் என்னி டம் இ ருந்த து ..!! இத னா ல பெத் தவங் களே என் னை வெறுத் துட் டா ங்க ..!! வெளி ப்படை யா க கூறி ய இயக் குன ர் பா லா ..!!

0 198

பாலா ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் ,திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் . பின்னர் கடந்த 1999ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம்,

சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது . பின்னர் இதனை தொடர்ந்து நந்தா, பிதாமகன் ,நான் கடவுள் ,அவன் இவன் ,பரதேசி போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார்.  குறிப்பாக இவரின் படத்தில் நடிக்கும் நடிகர் , நடிகைகள் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்கள் .மேலும் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல்  தயாரிப்பாளராக மாயாவி,

பரதேசி ,பிசாசு, நாச்சியார் போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார் . இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாவிடம் , நடிப்பே அவ்வளவு தான் என்று இருந்த நடிகர்களை கைதூக்கி மேலே கொண்டு வந்துள்ளீர்கள் . இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டுள்ளனர் . இதற்கு பதில் அளித்த பாலா கூறியதாவது ,

என்ன பெத்தவங்களே என்ன வெறுத்துட்டாங்க,  ஏனென்றால் யாருகிட்டயும் இல்லாத கெட்ட பழக்கம் என்னிடம் அதிகம் இருந்தது.  இதனால் நான் ஒரு அனாதையாக இருப்பதாக அப்போது உணர்ந்தேன் . பின்னர் அதிலிருந்து மீண்டு வருவதற்காக கடினமாக உழைத்தேன்.  இதனால் யாரும் இல்லாதவங்க எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்று ,

எனக்கு நன்றாகவே தெரியும் . அதனால் தான் எல்லோராலும் கைவிடப்பட்ட நடிகர்களை நான் கைதூக்கி விடுகிறேன் என்று கூறியிருந்தார் . மேலும் குடிப்பழக்கத்தை சுத்தமாக விட்டு விட்டேன் , புகைப்பிடிப்பது மட்டும்தான் உள்ளது . அதையும் ஒரு சில நாட்களில் விட்டு விடுவேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர் பாலா அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.