பருத்தியின் மருத்துவகுணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

0 282

பருத்தியை நாம் ஆடைகள் தயாரிக்கவும், மெத்தைகளுக்காவும் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பருத்தியின் இலை, பூ, பஞ்சு, பட்டை, வேர், வேர்பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையது. இந்த பருத்தி பஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவதால் ஆயுள் அதிகரிக்கும். பருத்தி ஆடைகள் கோடை காலத்திற்கு ஏற்றது.

பிரம்மை நோய்

கற்பனையில் ஒரு சிலர் தங்களுக்கு கை வலி, கால் வலி என கூறுவார்கள். மருந்தால் இது சரியாகாது. இது மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து உண்டாகும் நோயாகும். இதற்கு பருத்தி வேரின் பட்டையை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு பாதியளவு சுண்டும் வரை காய்ச்சி வடிக்கட்டி 30மிலி அளவில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு கோளாறுகள் அதனால் ஏற்படும் கற்பனை நோய்கள் நீங்கும்.

செரிமானம்

இன்று பலருக்கும் இருப்பது செரிமான பிரச்சனை தான். இந்த செரிமான பிரச்சனக்கு மருந்தாக பருத்தி பயன்படுகிறது.

வலிமைக்கு..

இலைக்கொழுந்தை நிழலில் காயவைத்து குடிநீரிட்டு கழிச்சல்களுக்கு கொடுத்தால் கழிச்சல் நிற்கும். உடல் வலிமை பெரும்.

வெள்ளை படுதல்

30 கிராம் இலை அல்லது மொக்கை எடுத்து மசிய அரைத்து 80 மிலி பசும்பாலில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பெண்களின் வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.

வயிற்று கடுப்பு

தீராத வயிற்று கடுப்பு ஏற்பட்டால் இலைச்சாறு 30மிலி எடுத்து 150 பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.