தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு மாவட்டம் பாலைவனமாக்கப்படுகிறது..!

0 286

திருச்சுழி பகுதியை பாலைவனமாக்குவதர்க்காக தொடர்ந்து பாடுபடுகின்றன மாநிலஅரசும் ,மத்திய அரசும் ,உலககார்பரேட்வாதிகளும் ,

பனையூர்,சேதுபுரம் ,இலுப்பையூர் சாமிநத்தம் ,பிள்ளையார்நத்தம் ,பகுதிகளில் பல ஆயிர கணக்கான விளைநிலங்களை கைவசப்படுத்தி புதிதாக தற்போது சோலார் அமைக்கின்றனர்

ஏற்க்கனவே பனையூரில் மாண்புமிகு திருடிஜெயலலிதாவால் திறக்கப்பட்ட இந்த சோலாரில் ராட்சத நிலத்தடி போர்கள் அமைக்கப்பட்டும்

மற்றும் தண்ணீரை விலைக்கு வாங்கியும்
பயன்படுத்துகின்றனர் 1 சோலார் தகட்டை சுத்தப்படுத்துவதர்க்கு 7 லிட்டர்தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றனர்

1நாளைக்கு 3 முறை இந்த சோலார் தகட்டை சுத்தப்படுத்தும் வேலையை செய்கிறது சோலார் நிர்வாகம்
ஆக 9000ஆயிரம் சோலார் பிளேட்களை கழுவ 9000 X7 = 63000 லி.
ஆக 1 நாளைக்கு மூன்று முறை செயல்படுத்தப்படும்

இந்தசெயலுக்கு 63000 X 3 = 441000 லி பனையூர் சோலாரில் மட்டும் ஒரு நாளைக்கு 441000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது

இந்த கொடிய செயலாள் திருச்சுழி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிக அதிகமாக குறைந்து விட்டது

தற்போது ,சேதுபுரம் ,சாமிநத்தம் பிள்ளையார்நத்தம் ,இலுப்பையூர் ,ஆகிய 4 இடங்களில் புதிதாக துவங்குகின்ற சோலார்களால் எவ்வளவு பெரிய பாதிப்பு காத்திருக்கிறது
என்று அறியாமல் மக்கள் வாழ்கின்றனர் ..

மற்றும் திராவிட அரசியல்வாதிகளாள் மாவட்ட நிர்வாக அனைத்து அதிகாரிகள் உடந்தையோடும் சேதுபுரம், பனையூர் கிருஷ்ணாபுரம், இலுப்பையூர் பகுதிகளில்

சவுடு மண் அள்ளுவதர்க்கான அனுமதியை வைத்துக் கொண்டு குவாரி அமைத்துஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்

நீரை சேமித்து வைக்க கூடிய மணலை கொள்ளையடிபதால் நிலத்தடி நீர் மட்டம் மிக குறைந்துவிட்டது

திருச்சுழி பகுதியில் 70,90 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 500,600, அடிக்கு போய் விட்டது

இதனால் பல கிராமங்கள் பேரழிவை காணும் நிலையில் உள்ளது இப்படி பட்ட கொடிய செயலை தடுக்க மக்கள் முன்வரவில்லை

ஏனென்றால் குன்டர்களை வைத்து தாக்குதலில் ஈடுபடும் கொள்ளையர்களை கண்டு அஞ்சுகின்றனர் பொதுமக்கள்

விரைவில் பாலைவனமாக மாறஉள்ள திருச்சுழி பகுதியை காப்பாற்றுங்கள்

கைஏந்துகின்றோம் காப்பாற்றுங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள்
எங்களின்வருங்கால சந்ததிவாழவழி செய்யுங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.