விழுப்புரத்தில் நேர்ந்த கொடுமை: பின்னணி உண்மை..? சாதி வெறியா..?

0 200

விழுப்புரம் அருகே 4ம் வகுப்பு மாணவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள வெளம்புத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ஆராயி(45). இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆராயிக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகள் தனம் மற்றும் மகன் தமயனுடன் ஆராயி வசித்து வந்தார். இந்நிலையில் ஆராயின் மகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். அருகில் ஆராயியும் அவரது மகள் (14) தனமும் படுகாயத்துடன் கிடந்துள்ளனர். சிறுமி தனம் கால்சட்டை இன்றி படுகாயத்துடன் கிடந்தது குறிப்பிடத்தக்கது இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஆராயி மற்றும் அவரது மகளை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் அனுமதித்தனர். இறந்துப் போன தமயனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமி தனத்திற்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்துள்ளனர்.

கொலையின் பின்னணி?

ஆராயிக்கும், அதே பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் பல மாதங்களாக நிலத் தகராறு இருந்துள்ளது. ஆராயின் நிலத்தில் 12 செண்ட் இடத்தை தனக்கு விற்குமாறு, குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவர் கேட்க அதற்கு ஆராயி மறுத்துள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே ஆராயி மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் கடந்த சில மாதங்களாக ஆராயிக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறாக பிரச்னை இழுபறியில் இருக்கும் நிலையில், இந்த இறக்கமில்லா சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 8 வயது சிறுவன் என்றும் பாராமல் அந்த 4ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி 14 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆரம்பத்தில் சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னரே இதை கொலை வழக்காக மாற்றிப் பதிந்துள்ளனர். இதற்கு அந்த குறிப்பிட்ட சமூகத்தினரின் அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆராயின் உறவினர்களான 3 இளைஞர்களிடம் மட்டுமே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், வழக்கின் போக்கை மாற்ற முயற்சிப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி உண்மையான குற்றவாளிகள் யார் என்ற கோணத்தில் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களிடம் உரிய பதில் இல்லை. மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது பிரதமரின் வருகையால் வேலையாக இருந்துவிட்டதாகவும், ஆனால் உரிய விசாரணை நடத்துமாறு கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.