தங்கத்தை விட மதிப்பானதா பாம்பு விசம்..? 1 கிராம் விசம் எவ்வளவு..?

0 274

 வன உயிரின பாதுகாப்புசட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும்ச ட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம்40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.

மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன

பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்

விஷமற்ற பாம்புகள்:     பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன்,மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை  காணப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.