முத ல் முறை யா க அஜி த்து டன் ஜோ டி சேரு ம் பிர பல மலை யா ள நடி கை ..!! ச ற் றும் யாரு ம் எதிர்ப் பார் க்கா த கூ ட்ட ணி ..!! இணை யத் தில் வெ ளி யா ன தக வ ல் ..!! எதிர்ப் பார் ப்பி ல் ரசி கர் க ள் ..!!

0 169

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார் அவர்கள் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான வலிமை  திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . இதை தொடர்ந்து மீண்டும் எச் வினோத் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர் .

இந்த படத்தையும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தான் தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக  பிரபல மலையாள நடிகை ஒருவரை ,

நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது . அந்த வகையில் மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மஞ்சுவாரியர் . இவர் சிறந்த நடிகைக்கான விருதுகளை பல முறை வென்றிருக்கிறார் .இப்படி தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த நடிகை மஞ்சு வாரியர் ,

கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்திலும்  இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்று கூட சொல்லலாம் . இதையடுத்து அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தில் கதாநாயகியாக நடிப்பது நடிகை மஞ்சுவாரியர் தான் என்று சமீபத்தில் கலந்துகொண்ட,

பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தார் . மேலும் நடிகை மஞ்சுவாரியர் முதல் முறையாக அஜித்துடன் ஜோடி சேர்வதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.