15 நாட்கள் எங்கே சென்றது விவசாயத்தை காப்போம் TamilNadu MEMES..? நடந்தது இதுதான்…!

0 785

வணக்கம்…!

பெரும்பாலும் முகநூல் பக்கத்தில் பின்தொடரும் 552000+ நபர்களில் 0.001% நபர்களுக்கு கூட என்னை தெரிய வாய்ப்பு இல்லை இருந்தும் சில நிமிடம் உங்களோடு பேச ஆசைப்படுகிறேன்..!

என்னை பற்றி….

பெரும்பாலும் படிப்பை விரும்பாதவன்…! இருந்தும் படித்தேன் அப்பா அம்மா பெருசா படிக்கல நமாலது படிக்கலாம் கொளரவத்திற்காக என்று ஆடு மாடு,நாய் கோழி, பயிர் ,இப்படி பலதரபட்ட சூழ்நிலையில் பிறந்ததில் இருந்தே வசிப்பவன்…!

பத்து படிப்பை முடித்து மேல்நிலையில் உயிரியில் படிப்பை கையில் எடுத்து கல்லுரியில் விசாயத்தை தேர்ந்தெடுத்தவன் காரணம் தாய் தந்தை கடினமான உழைப்பாளி, இருந்தாலும் கொளரவத்தை எங்கும் விட்டுகொடுக்காதவர்கள், இந்த ஒரு காரணத்திற்காகவும், வீட்டில் சில ஏக்கர் விவசாய நிலம் இருந்த காரணத்திற்காகவும் மட்டுமே விவசாய படிப்பை தேர்ந்தெடுத்தவன்..!

பெரும்பாலும் சல்லிகட்டு என்பது கடந்த சில ஆண்டுகளாக மட்டும் மூலை முடுக்கெல்லாம் சென்று அனைத்து தமிழர்களும் அறிந்துகொண்டார்கள் ஆனால் என் வாழ்க்கை சற்று வேறு சிறு வயது முதலே காளைகள் வளர்பில் சற்று பேராசை கொண்டவன் ஊர் மெச்சும் அளவிற்கு காளை வளர்க்க வேண்டும் என்று நினைத்தவன்…!

சல்லிகட்டில் காளைகளை அவிழ்க்க அனைவராலும் முடியாது என்பது நீங்கள் அறியாததே..! காரணம் ஒரு காளைக்கு குறைந்தது 5 நபரகள் வேண்டும் வாடிக்கு கொண்டு சென்று மீண்டும் கட்டு தரயையில்கட்ட இந்த காரணத்தினால் சல்லிகட்டுக்கு செல்வதில் சிறுவயது முதலே சிரமம் இருந்தது ஆனால் இன்றளவும் நான்கு காளைகள் வளர்கிறேன்.

சரி இப்போ ஏன் இதெல்லாம் சொல்றேன்னா 15 நாளுக்கு முன்பு இந்த முகநூல் பக்கம் திருடப்பட்டது. இதை பெரும்பாலும் மீட்க முடியாது என்று பலரும் ஆறுதல் கூறினார்கள் சிலர் மீட்டுவிடலாம் என்று துணை நின்றார்கள்..! ஆனால் முகநூலும் இணையதளமும் எனக்கு தொழில் அல்ல இருந்தும் சிறிது வருத்தப்படேன்..!

காரணம் பலமுறை அவசர உதவி தேவைகளை இம்முகநூலில் நம்பிக்கை உரியவர்களால் பெறப்பட்டுள்ளேன்…!

வீட்டில் விவசாய முறைகளை மீம்ஸ் மூலம் எடுத்துகூறியுள்ளேன்,பூச்சிகள் கட்டுப்பாடு,இயற்க்கை விவசாயம் பற்றியும் பதிவுகள் பதிந்துள்ளேன்..! ஆனால் கட்சி சார்பற்று அரசியல் என்பதை என்ன என்று அதிகம் பதிவுகளில் கூறியுள்ளேன்…! காரணம் தூய வாக்காளன் உருவாகாமல் நல்ல அரசியல் உருவாகது..!

காலை எழுந்து ஆடுமாடுக்கு தண்ணிகாட்டுவது எப்படி வழக்கமோ அதே போல முகநூலில் ஒன்று இரண்டு சமூக கருத்துக்களை கூறுவது வழக்கமாக கொண்டிருந்தேன்…!

விவசாயத்தை காப்போம் TamilNadu MEMES என்ன ஆனாது..?

வழக்கம்போல காலையில் 10ம் நாளின் பயிர் வளர்ச்சியை புகைப்படம் எடுத்து பதிவேற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து முகநூல் பக்கம் சென்றேன்…!

முகநூலில் இந்த பக்கத்தை காணவில்லை பலரிடமும் நடந்ததை கூறினேன் பக்கம் எப்படியோ திருடுபோய்விட்டது என்று கூறினார்கள் சிலர் முகநூல் நிர்வாகத்திடம் வழக்கு பதியுங்கள் என்றார்கள்…!

எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை காரணம் இந்த பக்கத்தில் நல்ல கருத்துக்களை மட்டுமே பார்த்து பகிர்ந்த நீங்கள் திருடியவர்கள் எந்த கருத்தை பதிவிட்டாலும் அது நாங்கள் தான் என்று நீங்கள் நிச்சயம் நினைக்க கூடும் என்பதால்..!

அடுத்த செப் 15 நாள் மாலை முகநூலிடம் தகவலை கொடுத்தோம் எங்களை அறியாமல் பக்கம் களவாடப்பட்டுள்ளது என்று..!

நான்கு கழித்து முகநூலில் இருந்து ஒரு செய்தி வந்தது…! அவை பின்தொடருமாறு

எங்களின் பாதுகாப்பு நலன்கருதி சில தகவல்களை புறக்கணித்துள்ளோம்…!

இத்தனை சான்றுகளையும் முகநூல் நிர்வாகத்திடம் வழங்கிய பிறகு அவர்களின் சரிபார்புக்கு பிறகே மீண்டும் பக்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது..!

பின்தொடரும் அனைவருக்கும் நன்றிகள்…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.