விவசாயத்தை காப்போம் பக்கத்தின் கஜா புயலுக்கு வந்த நிவாரண தொகையின் கணக்குகள்

0 657

முதலில் உதவியவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும் நன்றி..!

புயல் பாதித்த பகுதிகளுக்கு தயவு செய்து உணவு வழங்குங்கள் என்று பதிவிட்டபோது பலரும் உதவ முன்வந்தனர் ஆனால் அவர்களால் நேரடியாக உதவ முடிவில்லை என்று எங்களிடம் முறையிட்டனர் சிலர் எங்களுக்கு பக்கபலமாக இருந்து வழியும் நடத்தினார், பிறகு கலந்து யோசித்து அட்மின் ஆகிய எனது வங்கி கணக்கை வெளியிட ஒப்புதல் தந்தேன்..!

பலரும் ரூபாய் 100முதல் பல ஆயிரம் வரை எனது தனிப்பட்ட வங்கி கணக்கில் நம்பிக்கையில் செலுத்தினீர்கள் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதில் எனக்கு பெறும் பங்கு உண்டு ஆகவே இந்த பதிவு

தேதி. எடுத்த தொகை

  1. 19/11/18 20000
  2. 20/11/18 20000
  3. 21/11/18 50000
  4. 22/11/18 25000
  5. 23/11/18 50000
  6. 23/11/18 20000
  7. 24/11/18 20000
  8. 24/11/18 20000

மொத்தம். = 275000

24/11/18 காலை 8மணிக்கு மேல் கையிருப்பு அதாவது பொருட்கள் வாங்கி முடித்த பிறகு இன்றைய தினம் தன்னார்வலர்கள் வங்கியில் செலுத்திய இருப்பு தொகை ₹15789

மேற்கூறிய தொகைகளால் வாங்கப்பட்ட பொருட்கள்

பிரட், பிஸ்கட், அரிசி, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, நாப்கின்,தார்பாய்

சிலர் எப்படி முழு தொகைக்கும் சரியாக பொருள் வாங்கினீர்கள் என்று நினைக்கலாம் அதாவது சில்லறைகள் உள்ள பணத்தில் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி எள்ளுருண்டை போன்றவை வாங்கப்பட்டு முழு தொகையாக சரிசெய்யப்பட்டது

இவையில்லாமல் தன்னார்வலர்கள் நேரடியாக எங்களிடம் கொடுத்த உணவு பொருட்கள், உடைகள்,

இரண்டு நாட்களின் வாகன வாடகை அவை எங்களின் தனிப்பட்டது இந்த பணத்தில் இருந்து எடுக்கவில்லை,

மூன்று நாட்கள் இலவசமாக ஆட்டோ வந்தது

பழனி முருகன் ஆட்டோ,

விவசாயம் காப்போம் ஆட்டோ

நேரடியாக வந்து பொருட்களை கொண்டு செல்ல உதவிய நண்பரின் நண்பர்கள், தஞ்சை கல்லுரி மாணவர்கள், பெங்களூரில் இருந்து ஒரு அக்கா அண்ணன், மற்றும் செல்லும் திசைக்கெல்லாம் சலைக்காமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்கள் இவை அனைத்தும் நடக்க தங்களால் முடிந்ததை கொடுத்த உங்கள் அனைவருக்கம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

குறிப்பு: நீங்கள் ஏன் வழங்குவது போல புகைப்படங்கள் எடுக்கவில்லை என்று யாராவது கேட்டாலோ, நினைத்தாலோ,

அவர்கள் ஒன்றும் நம்மிடம் பிச்சையெடுக்கவில்லை நாமும் அவர்கள் பிச்சையிடவில்லை..! ஆகவோ புகைப்படங்கள், விளம்பரங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது ஆனால் ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, காரணம் மாற்ற ஊர் மக்களும் பசியாற வேண்டும் என்று

பின் குறிப்பு:

இந்த இணையத்திலும் சரி முகநூல் பக்கத்திலும் சரி பதிவிடுவது அட்மின் ஆகிய யுவேந்திரன்.ஆ மட்டுமே ஆகவே சிலருக்கு பதில் அளிக்க தாமதமாகி இருக்கலாம், சிலருக்கு பதில் அளிக்கமாலும் விட்டிருக்கலாம்..!

இனிவரும் தொகையில் தார்பாய், மரக்கன்றுகள் வழங்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது எனினும் காலம் தான் முடிவு செய்யும் தேவைகளை

நன்றிகள் கோடி…

வேறு எந்த தகவலுக்கும் :9025263308

You might also like

Leave A Reply

Your email address will not be published.