மாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு சூடா..? அல்லது வியாபார நோக்கத்தால் பரப்பப்பட்ட புரளியா..?

1,193

ஜூன் ஜூலை என்றாலே மாம்பழத்திற்கு பஞ்சம் இல்லை ஆனால் மாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு சூடு கேடு என்று பலவகையான செய்திகள் நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டு தான் வருகிறது.

சரி இந்த செய்திகள் எல்லாம் பரப்புவது யார் கிராமத்தினரா இல்லை நகரத்தில் உள்ளவர்களா..? கிராமத்தில் உள்ளவர்களிடம் பெரும்பாலும் சமூக வலைதள பயன்பாடு குறைவு தான் பிறகு எப்படி கிராமத்தில் உள்ள ஒரு நபரால் இதுபோன்ற செய்திகளை சமூக வலைத் தளத்தில் வெளியிட முடியும்..?

ஆனால் நகரத்தில் மருத்துவர்கள் இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுகிறார்கள் என்று சொல்வதால் அவர்களுக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது என்று சிலர் கேட்கலாம்..!

அதாவது மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இயற்கையின் பயன்பாட்டை தவிர்க்கிறார்கள் அவ்வளவுக்கு அவ்வளவு பெரிய நிறுவனங்களில் வளர்ச்சி அதிகரிக்கும்

இதுதான் உலகத்தின் வியாபாரம் இதையும் மருத்துவர்கள் செய்கிறார்கள் என்பது ஆச்சரியபடுவதற்கில்லை

ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள ஒரு நபர் மருத்துவமனைக்குச் சென்றால் பழங்கள் சாப்பிடுங்கள் என்று கூறும் மருத்துவர்கள் விட இந்த டானிக்கை வாங்கு அந்த டானிக்கை வாங்கு என்று கூறும் மருத்துவர்களே அதிகம்

நோய்களிலிருந்து பெரும்பாலும் தப்பிப்பதற்கு ஒரே வழி இயற்கை மட்டுமே அதாவது பருவத்திற்கு கிடைக்கும் காய்கள் பழங்கள் பானங்கள் ஆகியவற்றையும் இயற்கையாகவே அப் பருவத்திலேயே வாங்கி சாப்பிட்டு விடுங்கள் பெரும்பான்மையான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்

சரி இப்பொழுது மாம்பழத்திற்கு வருவோம் உண்மையாகவே மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் நிச்சயம் கிடையாது அளவுக்கதிகமாக உண்ணும் பொழுது மட்டுமே உடல் உபாதைகள் ஏற்படும் அது மட்டுமல்ல எந்த ஒரு உணவு பொருளையும் சேரும்

மாம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது அதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று குறைத்துக் கொள்வது நல்லது

சிறு குழந்தைகள் மாம்பழத்தை விரும்பி சாப்பிட்டால் பிரச்சனைஇல்லை தயவு செய்து நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் உடல் உபாதைக்கு வழிவகுக்கும்

பொதுநலன் கருதி வெளியிடுவோர்..!

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.