தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

1,050

காலைல எந்திச்சி குளிச்சதுல இருந்து இரவு வரைக்கும் நமக்கு நெறைய விசயங்கள்ல தேங்காய் எண்ணெய் உபயோகப்படுது.

கடையில போயி பாக்கெட்ல இல்ல பிளாஸ்டிக் டப்பால இருக்குற எண்ணெய்தான் வாங்கி உபயோகப்படுத்துறோம்.

சரி. இப்படி நாம வாங்கி உபயோகிக்கற எண்ணெய் எல்லாம் தேங்காய் எண்ணையே கிடையாது. எப்படிங்கரீங்களா? சந்தைல தேங்காய் விலை ஏறும் போது தேங்காய் எண்ணெய் விலை எறனும்லா?

ஆனா இங்க ஏறி இருக்காது. அப்போ எப்பதான் ஏறும்…? நல்லா கவனிங்க…. பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும் போதுதான் இந்த தேங்காய் எண்ணெய் விலையும் ஏறி இருக்கும்.

பெட்ரோலிய பொருட்களுக்கும் கடைல வாங்குற தேங்காய் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்..? பெட்ரோலிய பொருட்களோட ஆக கழிவுதான் நாம உபயோகப்படுத்துற தேங்காய் எண்ணெய்.

அந்த கழிவைத்தான் நம்ம தலையில தேச்சிக்கிறோம். ஏன், நம்ம உணவுப்பொருட்கள்ள கூட அதத்தான் சேத்துக்கிறோம். சின்னக்குழந்தைகளுக்கு தேய்க்கிற பேபி ஹேர் ஆயில் கூட இந்த கழிவுதாங்க.

சின்ன அதிர்ச்சியா கூட இது இருக்கும். ஆனால் இதுதாங்க 100% உண்மை. (பாட்டில் மற்றும் பாக்கெட்டில் எழுதி இருக்கும் ingredients பாருங்கள். அதில் மினரல் ஆயில் என்று இருக்கும்.

அதுதான் பெட்ரோலிய கழிவு. இதோடு வாசனை திரவியத்தையும் சேர்த்து இருப்பார்கள்).

இந்த எண்ணையை நாம உபயோகபடுத்துரதால நமக்கு என்னென்ன கெடுதி அப்படிங்கிறதையும் இப்ப நான் சொல்லிடுறேன்.

முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.

முடி கொட்டும்.

முடி சீக்கிரம் வெள்ளையாகி போகும்.

தோல் வறண்டு போய்விடும்.

உணவோடு இதை சேர்த்துக்கொள்ளும்போது உடலுள் சென்று கெட்ட கொழுப்புகளாக மாறி உள்ளேயே தங்கிவிடும்.

அப்போ சுத்தமான தேங்காய் எண்ணெய் பெறுவது எப்படி? வெகுசில கடைகளிலே கிடைக்கும் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணையை வாங்கி பயன்படுத்தலாம்.

அதன் தரத்தினை உறுதி செய்துகொள்வது நல்லது. அப்படி இல்லை என்றால் நாமே எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறேன். இம்முறையானது முன்னோர்கள் வீட்டினில் பயன்படுத்திய ஒன்றுதான்.

இந்த தலைமுறையினருக்கு அது மறைக்கப்பட்டு விட்டது. அதன் செய்முறையை பற்றி இப்போது சொல்கிறேன்.

வெள்ளோட்டமாக முதலில், ஒரு நூறு மில்லி அளவு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தேங்காய் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள்.

அந்த காய் இளம் காயாகவும் இல்லாமலும், முற்றிலும் தண்ணீர் வற்றிய காயாகவும் இல்லாமலும் தேங்காய் பூ துருவி எடுக்கும் தன்மை உள்ள காயாக இருக்க வேண்டும். (சாதாரணமா சமையலுக்கு பயன்படுத்துகின்ற காய் போல்) இப்போது தேங்காயை துருவி பூ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த பூவில் சிறிதளவு நீர் விட்டு கையால் நன்கு பிசைந்து பால் எடுக்கவும். அந்த பாலை வடிகட்டி, பின்பு மீண்டும் சிறிதளவு தண்ணீர் விட்டு கையால் பிசைந்து பால் எடுக்கவும். பூவில் இருந்து முழுவதும் பால் எடுக்கும் வரை இம்முறையினை மீண்டும் மீண்டும் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

(சிலர் வெந்நீர் விட்டு கலந்து பால் எடுப்பார்கள். அப்படி செய்ய வேண்டாம். மிக்சியில் அடித்து பால் எடுக்கவும் கூடாது. ஆனால் ஆட்டு உரலில் இட்டு அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம்).

இப்படி எடுக்கப்பட்ட பாலை ஒரு காட்டன் துணியால் நன்றாக வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு இரவு அல்லது பதினைந்து மணி நேரமாவது மூடி வைத்து விடவும். குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மூடியை திறந்து பார்த்தால் தேங்காய் பாலானது பாலாடை கட்டி போல நீரில் மிதக்கும். அந்த பாலாடை கட்டியை ஒரு அகலமான கரண்டியால் வழித்து எடுக்கவும்.

மீதமான நீரை அப்புறப்படுத்தி விடவும்.
இப்போது ஒரு வாணலியில் இந்த பாலாடை கட்டியை ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். காஸ் அடுப்பு என்றால் ‘சிம்’மில் வைத்து சூடேற்றவும். ஒரு கரண்டியால் பாலாடை கட்டியை லேசாக கிளறி விட்டுக்கொண்டே வரவும்.

நேரமாக நேரமாக பாலாடை கட்டியிலிருந்து எண்ணையானது வெளியேறும். இறுதியாக எண்ணெய் முழுதும் கட்டியிலிருந்து வெளியேறிய பின் கட்டியானது பழுப்பு நிறமாக மாறி அடியில் தங்கிவிடும். இந்த நிலையில் அடுப்பில் இருந்து வாணலியை கீழே இறக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது முகர்ந்து பார்த்தால் தேங்காய் வாசம் ‘கும்’மென்று மணக்கும். சூடு ஆறிய பின்பு காட்டன் துணியால் வடிகட்டி பாட்டிலில் அடைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதன்முறையாக செய்யும்போது சில தவறுகள் நேரலாம். குறிப்பாக அதிக சூட்டினால் எண்ணெய் அடி பிடித்துக்கொண்டு லேசான கருகல் வாடை வரலாம். அப்படி இருந்தாலும் எண்ணையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்தடுத்து செய்யும் போது தவறுகளை சரி செய்து கொள்ளலாம். முதலில் ஒரு தேங்காய் வைத்து முயற்சித்து பார்த்தோம். பின்பு படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம்.

இப்படி தயாரித்த எண்ணையை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்பதையும் அடுத்ததாக பார்ப்போம்.
தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் ஏற்படும் நன்மைகள்:

முடி உதிராது.
முடி உடைந்து போகாது.
முடி வறட்சி ஏற்படாது.
பேன், பொடுகு தொல்லை இருக்காது.
மயிர்க்கால்கள் ஆரோக்யமாகி நன்றாக வளரும்.
சீக்கிரம் வெள்ளை முடி (இள நரை) தோன்றாது.
குழந்தைகளுக்கு இந்த எண்ணையை உடலில் தேய்த்து வந்தால் தோல் மினுமினுப்புடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கும்.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும் தங்களது தோல் மினுமினுப்பு பெற இந்த தேங்காய் எண்ணையை உபயோகிக்கலாம்.
இந்த எண்ணையை சமையலுக்கு பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலும் நல்ல மனமுடன் இருக்கும்.
மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில் பெரும்பாலான நோய்கள் கடைகளில் விற்கும் செயற்கை முறையில் தயாரித்து விற்கப்படும் எண்ணெய்களால்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.