தாய்பாலிலுயும் விசம் என்று வேலையை விட்ட இளைஞர்|உண்மை சம்பவம்

0 358

வேலையை விட்டு வந்து இந்த ஆகஸ்டு மாசத்தோட மூனு வருசம் ஆச்சு. உலகின் சுத்தமான உணவு சொல்லபடுற தாய்பால், தேன்லயும் பூச்சுகொள்ளியோட எச்சம் இருக்குனு தெரிந்தவுடன் அதிர்சியாக இருந்துச்சு. எந்த ஒரு தெளிவும் இல்லாம விவசாயம் சம்பந்தமான எதாவது ஒரு வேலைய செய்யலாம்னு கிளம்பிவந்துட்டேன்.

விதைகள் என்ன ரொம்ப கவர்ந்துச்சு விதைகள சேகரிக்க தொடங்கினேன்.
காய்கறி நாட்டு விதைகள நிறைய சேகரிச்சேன்.

மரங்கள வளர்பு மேல இருந்த ஆர்வத்துல
விதைபந்துகள் செய்ய தொடங்கினேன்.

ஒருகட்டத்துல சிறுதானியத்ல இருக்குற இரகங்கள் பத்தி தெரிஞ்சப்போ ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சி, இந்த இரகங்கள
பத்தி யாரும் பெருசா பேசவும் இல்ல.

சிறுதானிய விதைகள சேகரிச்சு விவசாயிகளுக்கு குடுத்தப்போ, அவங்க விதைக்க ஆர்வம் காட்டல காரணம் சரியான விலையில்ல, அத சுத்தபடுத்தி உணவா பயன்படுத்துற தொழில்நுட்பமும் கருவிகளும் எங்க இருக்குனு தெரியல.

விதைகள பயன்பாட்டுக்கு கொண்டுவராம பாதுகாக்க முடியாதுனு தோணுச்சு. தொழில்நுட்பத்தை தேடி போனேன்.

இதுக்கு நடுவுல எனக்கான பொருளாதார தேவைய பூர்த்தி பன்ன சின்ன சின்ன வேளைகள செஞ்சி தற்காலிகமாக தள்ளி போட்டுகிட்டு வந்தேன்.

பொருளாதார தேவையையும் என்னோட தேடலயும் ஒன்றாக இணைச்சாதான் வேலைகள சரிவர செய்ய முடியும்னு தோனுச்சு.

சிறுதானியத்த மதிப்புகூட்டல் பற்றி கொஞ்சம் தெளிவு இருந்த்தால அதற்கான வேலைகள தொடங்கினேன்.

குத்தகைகோ இல்ல வாடைகை இடம் வேண்டாம்னு தோட்டத்துலயே அப்பா அம்மா உதவியோட வேலைகள தொடங்கினேன்.

பல இடர்பாடுகளுக்கு பிறகு இயந்திரம் வாங்கி பயன்பாட்டுக்கு கொண்டுவந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு இரண்டு விவசாயிகள் சிறதானிய பயிர் செஞ்சிட்டாங்க, இன்னும் சிலர் பயிர் செய்ய தயார் ஆயிட்டாங்க

இந்த மூனு வருசத்துல நிறைய
‎நல்ல நண்பர்கள் கிடச்சி இருக்காங்க வேலைகள் இடர்பாடு ஏற்பட்டு தடுமறுன போதெல்லாம் பெற்றோர்களும், நண்பர்களும் கொடுத்த ஊக்கம்தான் இந்த வேலை நிறைவா வர காரணம்.

உடன் பயணித்த ,உதவிய நண்பர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த இடம் எப்படி இருக்குனு காமிக்க அசைபடுறேன்…

பெயர் :ஜனா

தெலைபேசி எண்:9489002820

You might also like

Leave A Reply

Your email address will not be published.