காலையில் எழுந்ததும் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்..?

0 515

தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

காலை எழுந்ததும் முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு மற்ற வேலையை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இது ஏன்? என்ன காரணத்திற்காக இவ்வாறு தண்ணீர் பருகுகின்றார்கள்? இதை பற்றி அறிவியல் என்ன கூறுகிறது பார்ப்போம்:

இரவு குறைந்தது 7 மணி நேரம் தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கிறோம். இதன் விளைவாக உடலில் நீரின் அளவு குறைந்து இருக்கும். வறண்ட தொண்டை இதற்கு ஆதாரம். இப்படி இருக்க, எழுந்தது நீர் பருகினால் சில நொடிகளில் இழந்த நீரை உடல் மீட்டுக்கொள்ளும்.

– ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து வறண்ட உணவு குழாயில் உணவு பண்டங்கள் இறங்குவது சிறிது சிரமம் ஆகிவிடுகிறது. சில முறை குமட்டல், அடைப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வு, தண்ணீரை முதலில் குடிக்க வேண்டும். இது நீண்ட இடைவேளிக்குப்பிறகு உணவு எடுத்துக்கொள்ளும் போதும் பொருந்தும்.

– காலையில் எழுந்திரிக்கும் போது உடலில் உஷ்ணம் இருப்பதை பலரும் சந்தித்திருப்பார்கள். உடலை குளிர்விக்க ஒரு டம்ளர் நீர் உதவும்.

– பெரும்பாலான நேரங்களில் நீரின் தாகத்தை மனித மூளை பசி என்று புரிந்துக்கொள்ளும். இதனால் உடலில் சக்தி குறையாமல், உணவு தேவைப்படாத போது பசி எடுப்பதாக மாற்றாக கூறும் மூளைக்கு தீனி போட்டு போட்டு சில நாட்களில் 2 கிலோ எடையை பரிசாக பெற்றுக்கொள்கிறோம்.

– உணவை அதிகமாக உட்கொள்ளமாட்டீர்கள், இதனால் அளவான உணவு மட்டும் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போல் தோன்றும். தானாகவே எடை குறையும்.

– உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும், வயிற்றை அலசி அழுக்குகளை வெளியேற்றும்.

– உடலின் செயல்பாட்டை 24% வரை அதிகரிக்க உதவும்.

– சிறு நீரகத்தை சுத்தப்படுத்த உதவும்.

– முகம் மாசு மரு இன்றி பளபளக்கும்.

வெறும் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லையென்றால், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.