கஜா புயலை நேருக்கு நேர் சந்தித்த ஒரு அனுபவம்..! உங்களோடு நான்..!

0 236

இயற்கை விசித்திரமானது..!

புயல் நேரடியாக தாக்கியது இருக்க வீடு உடுத்த உடை , மரம் செடி கொடி அனைத்தும் தரைமட்டமானது

மனிதன் நிவாரணம் தேடினான்

பறவைகள் வழக்கம் போல கூட்டை கட்ட தொடங்கின

அன்று இரவு வழக்கம் போலவே உறங்க சென்றேன்..! அன்றைய இரவு விரைவில் விடிவியவில்லை காலை எழும்போது கோழிகளின் சத்தம் கேட்கவில்லை, குயில்களின் கூவல் கேட்கவில்லை,

அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக கதவுகளும் ஜன்னல்களும் படபடத்தன..!

சிலர் அலைபேசியில் தொடர்பு கொள்ள காற்று வீசுகிறது என்று ஒவ்வொரு முறையும் அலைபேசியை அனைத்து வைத்தேன்..!

காற்றின் வேகம் கூடியது மரங்கள் அதிர ஆரம்பித்தன மரத்தடியில் இருந்த மாடுகள் அலற ஆரம்பித்தது

அவசர அவசரமாய் மாடுகளை பாதுகாப்பான பகுதியில் ஓட்டிசென்று அடைத்துவிட்டு திரும்புவதற்குள் மரங்கள் சாய்ந்தன குடிசைகள் பறந்தன

ஒருபுறம் பயம் தொற்றிக் கொள்ள மறுபுறம் அனைத்தும் அழிகிறதே என்ற வேதனையும் மௌனமாய் அமர வைத்தது.

காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க வீட்டின் ஓடுகள் பறக்க ஆரம்பித்தது..!

சாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் சமரசம் பேசிவாரே சென்றது கஜா

ஒருவழியாக காலை விடிந்தது சோலைகள் சுடுகாடாகின..!

குழந்தைகளின் மௌனங்கள் பெருசுகளின் கதறல்கள்..!

பசி உணர ஆரம்பித்தது, சமைக்க உணவு இல்லை, இதற்கு பிறகு உங்களின் சிந்தனைக்கு எட்டியவாறே விட்டுவிடுகிறேன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.