ஒரு பருக்கை சோறுதானே என்று நினைக்காதே ஒரு சிட்டுகுவியின் ஒரு வேலை உணவு அது…!

0 359

உங்கள் வீடுகளில் சாப்பிட்டு முடித்தவுடன் எஞ்சியிருக்கும் ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை கழிவுநீரில் கொட்டி வீண் செய்யாதீர்கள்..!

ஒரு பருக்கை சோறுதானே என்று நினைக்காதே ஒருசிட்டுகுவியின் ஒரு வேலை உணவு அது…!

எஞ்சிய சிறிது உணவுகளை வீட்டின் மேலோ அல்லது மரத்தடியிலோ போடுங்கள் சிட்டுகுருவிகளுக்கு உணவாகட்டும்…!

சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்

கிராமப்புற ஓட்டு வீடுகளில் உள்ள சந்து பொந்துகளில் கூடுகட்டி மனிதர்களுடன் மனிதர்களாக வாழ்ந்தவை சிட்டுக் குருவிகள். நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் வீடுகளில் முற்றம் என்ற ஓர் இடம் இருந்தது.

அங்கே சிறு தானியங்களை தானியங்களைப் பதப்படுத்வதற்காக இடித்து, புடைத்து, குருணை நீக்கி தானியங்களை காய வைப்பார்கள். இதனால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு கிடைத்தது.

இன்றோ வீடுகளில் தானியங்களைப் பார்ப்பதே அரிதாகி விட்டது.

நாம் சாப்பிட்டு எஞ்சியவற்றைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவை சிட்டுக் குருவிகள். அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் பெருகிவரும் காலகட்டத்தில் ஓடுகளும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை.

முற்றமும் இல்லை, தானியங்களும் இல்லை. பாத்திரங்கள் துலக்கப்பட்டு வீணாகும் சோற்றுப் பருக்கைகள் கூட நேரடியாகப் வடிகான் கழிவுகளுடன் கலந்துவிடுகின்றன.

சிட்டுக் குருவிகளின் வாழ்விடம், உணவுத் தட்டுப்பாடு காரணமாக அவை வெகுவாக அழிந்துவிட்டன. வீட்டுக்குள் பறந்து திரியும் குருவிகள் பல மின் விசிறியில் அடிபட்டு இறந்தன.

பொதுவாக மனித நடமாட்டம் இருந்தால் மற்ற பறவைகள் அந்த இடத்தை விட்டுப் பறந்துவிடும். ஆனால் சிட்டுக் குருவிகளோ மனிதர்கள் வசிக்கும் வீட்டுத் தாழ்வாரங்களில்தான் கூடுகட்டி வாழும்.

இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இடும். குஞ்சுகள் பொரிந்தவுடன் கூட்டில் இடப்பற்றாக் குறை காரணமாக ஆண் மற்றும் பெண் பறவை தனது குஞ்சுகளை நம்மை நம்பி விட்டுவிட்டு இரவு நேரத்தை வீட்டுக்கு வெளியே உள்ள சிறு மரங்களின் கிளைகளில் அமர்ந்து கழிக்கும்.

ஒரு பறவை இனம் தனது குஞ்சுகளை நம்மை நம்பி விட்டுச் செல்லும் போது ஆறு அறிவு படைத்த நாம் அதை காக்கத் தவறியதுதான் வேதனை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.