அன்று இரவு மதுரை பேருந்து நிலையத்தில் பொம்பள வேணுமா, எவ்வளவு வச்சிருக்க என்ற ஓசை என் காதில் விழுந்தது..!

0 2,420

ஒரு வேளையின் காரணமாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை நோக்கி இரவு பயணம் செல்ல நேரிட்டது..! கண்ணகி வாழ்ந்த ஊர் என்று கதாபாத்திரத்தில் வந்த அதே மதுரையை தான் இங்கு குறிப்பிடுகிறேன்…!

மதுரையை நெருக்கியவுடன் பொழிவிழந்த வைகை காற்று சற்று துர்நாற்றத்துடன் வீச தூக்கம் கலைந்து பேருந்தில் எனது உடமைகளை சரிபார்த்து இறக்குவதற்கு தயாராகி கொண்டிருந்தேன்..!

மதுரைக்கு நண்பர்களுடன் மட்டுமே சென்று பழகிய எனக்கு தனிமை பயணம் முதல் முறை இது…! இரவு 10:30 மணிக்கு மதுரை மண்ணில் கால் வைத்தபோது தமிழோடு திமிரும் தலைக்கேறிய உணர்வு அது..!

மதுரை… மல்லி…. மல்லி…. ஜில்லுனு ஜிகர்தண்டா ஜிகர்தண்டா… ஆரப்பாளையம்… ஆரப்பாளையம் தெப்பக்குளம்… பெரியார்.. பெரியார்… என்ற பலத்த குரல்கள் காதில் விழும் போது ஒரு 60 வயது கிழவி ஒரு இளைஞனிடம் அருகில் வந்து பொம்பள வேண்டுமா என்ற நாசுக்கான குரலும் காதில் விழுந்தது..! அந்த ஒரு நிமிடம் எனக்கு கண்ணகி நினைவில் வந்து சென்றால்..!

அந்த இளைஞன் பழைய உடை அணிந்து பார்க்க தர்ம சங்கடமான நிலையில் இருக்க நானும் என்ன நடக்கிறது என்று உற்று நோக்க ஆரம்பித்தேன்..!

குறிப்பு:இதை எழுதும் நான் ஒன்றும் உத்தமன் அல்ல கண்ணில் கணானும் பொண்களின் அழகை போகின்ற போக்கில் ரசனையுடன் ரசிக்கும் பலகோடி இளைஞனில் நானும் ஒருவன்..!

இளைஞனிடம் அந்த கிழவி எவ்வளவு என்று கேட்க 100ரூபாய் என்று கூற அந்த கிழவி சட்டென்று அவனை புறந்தள்ளி அடுத்த இளைஞனை நாடி சென்றால்..!

எனக்கு பேருந்து 11:30மேல் என்பதால் அந்த கிழவியவே உற்று நோக்க ஆரம்பித்தேன்.. சற்று நேரத்தில் அந்த கிழவியை சுற்றி சுமார் 30 பெண்கள் இருப்பார்கள் குழந்தைகள் முதல் 40வயது பெண்கள் வரை..! இதில் வேடிக்கை என்னவென்றால் காவல்துறையும் அந்த பெண்களின் கூட்டத்தை கடந்தே செல்கிறது..!

இது தவறா சரியா என்று கூட என்னால் யோசிக்க முடிவில்லை..! இதில் வாழ்வது அந்த தாசிகளாக இருந்தாலும் சில சமயங்களில் இளைப்பாற அமரும் இளைஞர்களும் இவர்களால் அழைத்தேசெல்லப்படுகிறார்கள்..!

இந்த சமூகம் எங்கே செல்கிறது..?

எதுவுமே புரியாமல் பேருந்தில் ஏறி என் பயணம் தொடர்ந்தது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.