அட்சய திருத்திகைக்கு நகை வாங்கினால் செல்வம் பெருகுமா..?

0 426

 

அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஆக்கபூர்வமா பாத்த எல்லாமே வியாபார யுக்திதான்..!

ஏழை மக்களையும் ஏமாற்றி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதால் அங்கு அதிர்ஷ்டம் எனும் மாயையை உண்டு பண்ணி மக்களை ஏமாற்றும் வித்தையே இது..!

ஆன்மீகம் ஆபாசம் இவை இரண்டிற்கும் அடிமையாணவர்கள் அதிகம் ஆகையால் எளிதில் ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆபாச விளம்பரங்களை பரப்புவார்கள்..!

அதில் ஏமாறதாவர்களை ஆண்மீக அதிஷ்டத்தால் ஏமாற்றுபார்கள்…!

காரணம் இது வியாபார உலகம்..!

வாங்குபவனுக்கு செல்வம் பெருகுமா பெருகாதா..? என்பதல்ல இங்கு வாதம் விற்பனுக்கு மட்டுமே 100% பெருகும் என்பதே கருத்து

உடனே இவன் தமிழர்கள் பாரம்பரியத்த தப்பா பேசிட்டான் அப்புடின்னு  கம்பு சுத்த யாரும் வராதீங்க..!

மரத்தெல்லாம் வெட்டிட்டு பூமி பந்து மேல  தண்ணீ ஊத்தி பூஜை பண்ணுனா மழை வரும் அப்புடின்னு நம்புற ஊருங்க இது..!

நகை வாங்குங்கள் யாரே சொல்கிறான் என்பதற்காக வாங்காதீர்கள் உங்களால்  முடியும் போது வாங்கி கொள்ளுங்கள்..!

அதிஷ்டம் என்பது முட்டாள்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் வார்த்தை என்பதை மறந்துவிடாதீர்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.