“நாலு பேர் என்ன நினைப்பார்கள்…?”நாலுபேர் என்ன பேசுவார்கள்..?”

0 314

முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்
கள்ளச்சிரிப்பு ” என்றார்கள்

கோபங் கொண்டேன்,
சிடுமூஞ்சி” என்றார்கள்.

அதிகம் பேசாமலிருந்தேன்,
ஊமையன்” என்றார்கள்.

சளசளவென்று பேசினேன்…!!
ஓட்டவாய் ” என்றார்கள்.

புதிய தகவல்களை பரிமாறினேன்
கருத்து கந்தசாமி ” என்றார்கள்.

அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,
ஜால்ரா ” என்றார்கள்.

எல்லா செயல்களிலும்
முன் நின்று செய்தேன்….!!
முந்திரிக்கொட்டை என்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்தேன்,
நடிப்பு” என்றார்கள்.

யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்
ஏமாற்றுக்காரன்” என்றார்கள்.

வணங்குவதை நிறுத்தினேன்,
தலைக்கனம்” என்றார்கள்.

ஆலோசனை வழங்கினேன்,
படிச்ச திமிர்” என்றார்கள்.

சுயமாக முடிவெடுத்தேன்,
அதிபுத்திசாலி
என்றார்கள்.

நான் கண்ணீர் விட்டு அழுததால்,
வேஷக்காரன்” என்றார்கள்.

நான் சிரித்த போதெல்லாம்,
மறை கழண்டுப் போச்சு” என்றார்கள்

எதிர்கேள்வி கேட்டால்,
வில்லங்கம் என்றார்கள்

ஒதுங்கி இருந்தால்,
பயந்தாங்கொள்ளி ” என்றார்கள்.

உரிமைக்குப் போராடினால்,
கலகக்காரன் ” என்றார்கள்.

எதற்கும் கலங்காமல் இருந்தால்,
கல் நெஞ்சன்” என்றார்கள்.

“நாலு பேர் என்ன நினைப்பார்கள்…?”நாலுபேர் என்ன பேசுவார்கள்..?”

யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்…!!தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை…….!!

அந்த நாலு பேரை கழற்றி விட்டு…….,என்னை அணிந்துக் கொண்டேன். துவங்கியது
எனக்கான வாழ்வின் துளிர்…வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக நிம்மதியாக.

You might also like

Leave A Reply

Your email address will not be published.