திடீர் செலவுகளில் தர்மசங்கடமான செலவு என்பது இதுதான்…!

0 217

..இறப்பு என்ற தலைப்பு….
குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள் கவனித்ததுண்டா…?

உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும்… எளிமையா ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது….

அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா சிலமணி நேரத்தில் பணம் எப்படி பிரட்டுவது என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?
கடன் பழக்கமே இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்……திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான்.
“ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்….,
நாம எழுதுற மொய்ப்பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான் இந்த மொய்பழக்கம்….
எங்க பக்கம் ஒரு தரப்பு மொய் வசூல் பண்ணறதுக்காகவே ஒரே காதுல பல பஞ்சர் அடிபாய்ங்க அது வேற கத….
ஆனா கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை….
நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள் மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்….
…..
பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு காலநெருக்கடியில உருவாகி இருக்கலாம்……
ஆனா கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் சார் மொய் எழுதும் பழக்கம் ரொம்பவே அவசியம்….. ஏதோ சில சாதிஆளுக கிட்ட அந்த பழக்கம் இருக்கலாம் தெரியல.., எனக்கு ஆனா பெரும்பாலும் இல்லை தானே…..,
அம்மாவ அப்பாவ அண்ணன தம்பிய பிள்ளைய இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா…?
தன்மானம் சுட அவன நாம கடனோ உதவியோ கேட்கவிடலாமா..?
……
உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனொருவனின் கரங்களை இறுக பற்றி.
“நாங்க இருக்கோம்யா, தைரியாமாஇருயா செலவ பாத்துக்கலாம்”னு சகமனிதனாக நாம் சொல்லவேண்டிய தருணம் அது தான்…
இதுவரை இல்லாவிட்டாலும் இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது…
சாவு வீட்ல சாவத்தவிர வேற எதுக்காகவும் ஒருத்தன் அழக் கூடாது…..

இனியாவது இருக்க பற்றிக்கொள்ளுங்கள் சம்பிரதாயங்களை அல்ல சகமனிதர்களை…….

இப்படிக்கு அன்புடன் தோழி
இவள் ஈரோடு????நாநீ.நா

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.