தமிழ் உலக மொழிக்கெல்லாம் மூத்தது என்று கூற என்ன ஆதாரம் என்று கேட்டால் தயங்காமல் இதனை கூறுங்கள்..!

0 1,322

செம்மொழிக்கான 11 தகுதிகள்:

1. பல்லாயிரமாண்டு தொன்மை (antiquity)

2. வேறு எந்த மொழியிலும் காணப்படாத தனித் தன்மை (individuality)

3. பொதுவான எழுத்துகள் (common characters)

4. நடுநிலைத் தன்மை(Neutrality)

5. பிறமொழிகளுக்கு மூல மொழியாக இருக்கும் தாய்மைப் பண்பு (Parental kinship)

6.பண்பாட்டு வெளிப்பாடு (finding expression in the culture art and life experiences of civilized society)

7. பிற மொழிகள், இலக்கியங்கள் சாராமல் தனித்து இயங்கும் பண்பு ( The ability to function independently without any impact or influence of any other language and literature)

8. இலக்கிய வளமை (Literary prowess)

9. மேன்மையான கருத்துகள், குறிக்கோள்கள் (Nobel ideas and ideals)

10. கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் தனித்துவம் (Originally in artistic and literary expressions)

11. மொழியியல் கோட்பாடுகள்(Linguistics principles) ஆகியன.

இந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்ட உலகச் செம்மொழிகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒன்று… இரண்டு… மூன்று… நான்கு… அல்லது ஐந்து மொழிகள்…?

அதுதான் இல்லை… இந்த 11 தகுதிகளையும் கொண்ட மொழி… ஒன்றே ஒன்றுதான்!

அது தமிழ் மொழி!….இதை பற்றி பள்ளியில் கல்லூரியில் சொல்லி கொடுத்தது உண்டா??? தமிழ் மொழியை பற்றி ஒரு பாட நூல் கூட கற்பிக்க படுவதில்லை… தன் மொழியின் சிறப்புகளை கூட தெரியாமலேயே இருப்பது வெட்கக்கேடு…

தமிழன் என்ற வீரத்தோடும் மானத்தோடும் பகிருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.