உயில் போலியானதாகவோ அல்லது அதில் மோசடி நடந்திருக்கவோ வாய்ப்புகள் உள்ளது. எச்சரிக்கை..!

0 355

1. உயிலின் அசல் பத்திரம் (Original Will) வேண்டுமென்றே தொலைக்கப்பட்டோ அல்லது மறைக்கப்பட்டோ இருக்கலாம்.

2. உயிலில் எழுதியவருக்கு பதில் வேறு யாராவது கையொப்பம் இட்டிருக்கலாம்.

3. உயிலை எழுதியவர் அதில் கையெழுத்து இடும்போது சட்டப்பூர்வ தேவைப்படி இரண்டு சாட்சிகளின் முன்பாக கையெழுத்து போடாமல் இருந்திருக்கலாம்.

4. உயில் எழுதும்போது, அதனை எழுதியவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியாமலேயே கையெழுத்து போட வைக்கப்பட்டிருக்கலாம்.

5. ஏற்கனவே எழுதப்பட்டிருந்த உயில் முழுமையுமோ அல்லது ஒரு பகுதியோ எழுதியவர் தன் இறுதிக்காலத்தில் மருத்துவமனையில் இருந்த போது மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.

6. உயிலை எழுதியவர் தானே எழுதாமல் அல்லது தனக்கு வேண்டியவர்களை விட்டு எழுதச் சொல்லாமல் D. I. Y (Do it yourself) என்று சொல்லக்கூடிய ரெடிமேட் என்று கூறப்படும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த உயிலின் படிவத்தை கடைகளிலிருந்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்று, அதில் காலியான இடங்களை நிரப்பி இருக்கலாம்.

7. உயிலில் எழுதப்படும் முக்கிய அம்சங்களை சுற்றியுள்ள இதர விஷயங்களில் (எழுதியவர் கையொப்பம் இடுவதை பார்த்தல், இரண்டு சாட்சிகள் கையொப்பம் இடுதல் போன்ற) தவறு இருக்கலாம்.

8. அந்த உயிலை எழுதியவர், ஏற்கெனவே உயில் எழுதி இருந்தால், அதற்கும் இந்த உயிலுக்கும் பெரிய மாற்றங்கள் இருந்தால், உதாரணமாக பழைய உயிலில் சொத்து முழுவதையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுத்திருந்து, இந்த உயிலில் அவர் யாருடைய பாதுகாப்பில் இருந்தாரோ அவருக்கு மட்டும் கொடுத்திருந்தால்

9. உயிலை எழுதியவர் தன்னுடைய இறுதிக்காலத்தில் யாராவது ஒருவரை நம்பி அவர் பாதுகாப்பில் இருந்திருந்தால்

10. அந்த உயிலின் பயனாளிக்கு உயிலை எழுதியவர் இறக்கும் முன்பாக ஏதேனும் பரிசு கொடுத்திருந்தால்

11. உயிலில் கையொப்பம் இட்டுள்ள சாட்சிகள் உயிலில் உள்ள ஒரே பயனாளியின் நண்பராக இருந்தால்

12. இறந்தவரின் சொத்துக்களை செலவு செய்வதற்கு பகர அதிகாரம் பெற்ற முகவர் (Power of Attorney agent) நியமிக்கப்பட்டிருந்தால்

பதிவு: மோகன்தாஸ் சாமுவேல் (வழக்கறிஞர்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.