நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருத்தல் உங்களுக்கு இந்த நோய் வரக்கூடும் கவனமாய் இருங்கள்..!

0 6,577

கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

நோய்க்காரணம்

மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மூல நோயின் வகைகள்

இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. அவை ஏற்பட்டுள்ள இடம், தீவிரத்தன்மை, மோசமாகும் தன்மை கொண்டு வேறுபடும். அதில் பெரும்பாலும் இரண்டு வகைகளால் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.

அறிகுறிகள்

பைல்ஸ் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
இயற்கை வைத்தியம்

பைல்ஸ் பிரச்சனை இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி நாள்பட்ட இரத்த கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பைல்ஸ் பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
ஐஸ்

பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை எனில் அது ஐஸ் தான். ஐஸ் கொண்டு அவ்விடத்தை ஒத்தனம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
கற்றாழை

கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு கூட பைல்ஸ் சிகிச்சைக்கு உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, அதனை மெதுவாக ஆசனவாயில் தடவ வேண்டும். ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும், கடுமையான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்.
பாதாம் எணணெய்

பாதாம் எண்ணெய்க்கு பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும் குணம் உள்ளது. ஆகவே சிறிது காட்டனை எடுத்து, அதனை பாதாம் எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த செயலை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆலிவ் ஆயில்

தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் குடித்து வந்தால், அவை வீக்கத்தை குறைப்பதோடு, அதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால், ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும்.
தானியங்கள்

பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும். மேலும் தானியங்களில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுவதால், கடுமையான வலியில் இருந்து தப்பிக்கலாம். எனவே ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைத்து, அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் தரும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு பலமுறை தடவி வர வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
டீ பேக்

டீயில் உள்ள டானிக் ஆசிட், மூல நோய்க்கு காரணமான வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். அதற்கு டீ பேக்கை சுடுநீரில் ஊற வைத்து, அதனை லேசாக குளிர வைத்து, பின் பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்து வருவது நல்லது. இல்லையெனில், டீ பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
தண்ணீர்

முக்கியமாக பைல்ஸ் உள்ளவர்கள், தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும். ஒருவேளை தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், கடுமையான இரத்தக் கசிவு மற்றும் வலியை உணரக்கூடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.